ஒரு வாய் சோற்றுக்காக எவ்வளவு அவமானம்.. எங்க ஜாதிக்காரர்களுக்கு.. பகீர் வீடியோ வெளியிட்ட கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிப்பில் வரும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

நான் இன்னமும் இதே கேரக்டரில் தொடர்வேனா என்பது சந்தேகம் தான். அதற்கு காரணம் இதுதான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Actor Satish has said in the video that every day we earn hard and we have to face a lot of humiliation

அதோடு ஒவ்வொரு நாளும் நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, அந்த பணத்தை வீட்டிற்கு கொண்டு போவதற்குள் அதிகமான அவமானங்கள் பட வேண்டியது இருக்கு என்று அந்த வீடியோவில் நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் பிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அதிலும் வில்லனாக இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர். வில்லனாக இருந்தாலும் இவர் செய்யும் குறும்புகளும் நடிப்பு ஆக்சனும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று திடீரென்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அதிகமான ரசிகர்கள் நீங்கள் போக வேண்டாம் தயவு செய்து இந்த சீரியலில் இருக்க வேண்டும் சீரியலில் நீங்கள் இருந்தால் தான் நன்றாக இருக்கிறது என்று கூறி வந்தனர். அதைத்தொடர்ந்து கோபியும் நான் இந்த சீரியலில் மீண்டும் நடிக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

Actor Satish has said in the video that every day we earn hard and we have to face a lot of humiliation

இந்த நிலையில் இப்போது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் மீண்டும் தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது. நான் ட்ரை பண்றேன்... மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி. நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கு. பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு. நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர்.

அது என்னை போன்ற என் ஜாதிக்காரர்கள் பலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஜாதிக்காரர்கள் என்று சொல்வது என்னை போன்ற நடிகர்களை தான். அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை. அதனால் தான் நான் அடிக்கடி இன்ஸ்டாகிராம் விட்டு வெளியே போய் விடுகிறேன். கேரக்டர் வேறு, நிஜ குணம் வேறு என்பதை பலர் மறந்து போய் நாம் எப்படி நடிக்கிறோமோ அப்படித்தான் இருப்போம் என்று அசிங்கமாக திட்டுகிறார்கள். அது நம்முடைய நிஜ வாழ்க்கையில் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என்று பலர் நினைப்பதில்லை என்று அந்த வீடியோவில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+