இன்று நடிகர் சேதுராமனின் 2ஆவது ஆண்டு நினைவு தினம்.. மனைவி போட்ட உருக்கமான பதிவு!
சென்னை: நடிகர் சேதுராமனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மனைவி சமூகவலைதளத்தில் மிகவும் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் தோல் நோய் (Dermatologist) மருத்துவர். தனியாக ஒரு கிளினீக்கும் வைத்திருந்தார்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன், வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இரண்டாவது கிளீனிக்
இவர் 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் இரண்டாவது மருத்துவமனையையும் திறந்து வைத்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை சேதுராமன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி இரவு மாரடைப்பால் சேதுராமன் காலமானார்.

5 மாத கர்ப்பம்
இது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்த உமாவுக்கு அவர் இறந்து 5 மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்த்த உமா, மீண்டும் சேதுராமன் வந்துவிட்டார் என்றே பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சேதுராமனின் 2-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

உருக்கம்
இன்றைய தினம் அவரது மனைவி உமா ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் "நான் அழுதால் இந்த உலகை விட்டு திடீரென பிரிந்த அவரது ஆன்மாவிற்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டேன். நாம் ஒரு ஆன்மாவை மட்டும்தான் இழந்தோம். ஆனால் அந்த ஆன்மாவோ தான் சம்பாதித்து வைத்த அத்தனை ஆன்மாக்களையும் இழந்துவிட்டது.

வலி யாருக்கு?
அதனால் யாருக்கு வலி அதிகம்? ஒரு உயிரை இழந்த உங்கள் வாழ்க்கையா, இல்லை அனைத்து உறவுகளையும் இழந்த அவரின் வாழ்க்கையா? நினைவுகள்தான் விஷயமே என பதிவிட்டுள்ளார். இது ஒரு உறவை இழந்த நிறைய பேருக்கு ஆறுதல் கூறும் பதிவாகவே பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications