விஜய் அரசியலுக்கு வந்த பிறகு மாணவர்களின் மனநிலை மாறி இருக்கிறது.. நடிகர் ஷாம் சொன்ன காரணம்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜய் குறித்து அதிகமான விமர்சனங்கள் வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில சினிமா பிரபலங்களும் விஜய்க்கு சப்போர்ட் ஆகவும் பேசி வருகிறார்கள். சமீபத்தில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் விஜய் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றனர்ர. இந்த நிலையில் விஜயின் அரசியல் பயணம் குறித்து நடிகர் ஷாம் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் ஷாம் 90s காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இவருக்கு ஒரு சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் சில வருடங்களாக சினிமாவை விட்டு காணாமல் போயிருந்தார். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் வில்லன் போல இருந்து பிறகு தன்னுடைய தம்பியை புரிந்துகொள்ளும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். வரும் 2026ல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த போகிறோம் என்ற விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதற்காக தொடர்ச்சியாக மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களை சந்தித்து பேசி வரும் விஜய் குறித்து சில பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் நடிகர் ஷாம் விஜய் பற்றி பேசும்போது, விஜய் அண்ணா அரசியலில் வந்ததற்கு பிறகுதான் மாணவர்கள் எல்லாம் அரசியல் பற்றி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. அதற்கு முன்னாடி வரைக்கும் மாணவர்கள் அரசியல் என்றால் அசிங்கம், கேவலம் அப்படின்னு தான் நினைச்சுட்டு இருந்தாங்க. அந்த ஒரு மனுஷன் எல்லா பிம்பத்தையும் மாத்திட்டாரு. விஜய் அண்ணா அரசியலுக்கு வந்ததற்கு பிறகுதான் நிலைமையே மாறி இருக்கு என்று விஜய் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.
விஜய் பற்றி ஷாம் பேசிய கருத்தை விஜயனின் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் விஜய் ரசிகர்கள் நாங்கள் தற்குறி இல்ல எங்களுக்கும் அரசியல் தெரியும் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் சரி அவரிடம் உங்களுடைய கொள்கை என்னவென்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ஷாம் என்றும் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதற்கு விஜயின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
-
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications