மகிழ்ச்சியில் மனைவிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சாந்தனு.. உணர்வுப்பூர்வமான போஸ்ட்.. குவியும் லைக்ஸ்
சென்னை: நடிகர் சாந்தனு தன்னுடைய மனைவியான கிகி என்ற கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து உணர்வுப்பூர்வமான போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு சாந்தனு பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
சினிமா துறையில் ஒரு சிலருடைய குடும்பமே சினிமாவில் பிரபலங்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் பலருக்கும் பரிச்சயமான குடும்பம் தான் நடிகர் பாக்யராஜின் குடும்பம். பாக்யராஜ் இயக்குனராகவும், நடிகராகவும் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 80ஸ் காலகட்டத்தில் அவருடைய சினிமா பயணம் தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதுபோல பாக்கியராஜின் மனைவியான பூர்ணிமாவும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து இப்போது குணசித்திர வேடங்களிலும், அம்மா கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த தம்பதியின் மகன் மற்றும் மகளும் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் சரண்யா பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இப்போது சினிமாவை விட்டு விலகி பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சாந்தனு கல்லூரி படிக்கும் போதே கதாநாயகனாக மாறியிருந்தார். இப்ப வரைக்கும் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். சாந்தனுவின் மனைவியானகிகி என்ற கீர்த்தி பல சேனல்களில் தொகுப்பாளினியாக இருக்கிறார்.

பூர்ணிமாவை பாக்கியராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டது போல தான் சாந்தனு தொகுப்பாளினியாக இருக்கும் கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தான் காதலிப்பது பற்றி தன்னுடைய தந்தையிடம் முதன்முதலில் சாந்தனு சொல்லியிருந்தாராம். உடனே பாக்யராஜ் கிகி வீட்டிற்கு நேரடியாக சென்று பேசி இருக்கிறார்.
பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று கிகியின் பிறந்தநாள் அதனால் கிகியோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சாந்தனு அதற்கு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், நான் ஒரு நீண்ட உணர்ச்சிபூர்வமான குறிப்பை எழுத போனேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்... நீ எங்களுக்கு எவ்வளவு அற்புதமானவர் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். என் இதயத்தை திருடிய பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கிகியை டேக் செய்திருக்கிறார்.
இந்த பதிவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியினர் தங்களுடைய 41 வது திருமண நாளை கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் கொண்டாடி இருந்தார்கள்.
அப்போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பூர்ணிமா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். அதுபோல கீர்த்தி தன்னுடைய மாமனார் மாமியாருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார். பூர்ணிமா மற்றும் அவருடைய மருமகள் சேர்ந்து அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதுபோல பூர்ணிமா நடிகையாக மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு டிசைனராகவும் இருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தன்னுடைய மருமகள் ரொம்பவும் சப்போர்ட்டாக இருப்பதாக பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications