நடிகர் ஸ்ரீ நெஞ்சில் அவங்க அடிச்ச தழும்பு இருக்கு! நீங்க பீல் பண்றது அவருக்கு புரியாது.. தோழி சொன்ன அதிர்ச்சி விஷயம்
சென்னை: வழக்கு எண் 18, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய தற்போதைய நிலை குறித்து அவருடைய தோழி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் ஸ்ரீ பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே என்று பலர் அவருக்காக பீல் பண்ணி வருகிறார்கள். சோசியல் மீடியா பக்கங்களில் அவருடைய வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலரும் உருக்கமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் பலருடைய வேண்டுகோளாகவும் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ எந்த கமெண்ட் களுக்கும் பதில் கொடுப்பது இல்லை.

காதல் பிரச்சனை
இந்த நிலையில் ஸ்ரீ தற்போதைய நிலைக்கு காரணம் போதைப் பொருள் பழக்கம், காதல் தோல்வி என்று பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இது பற்றி அவருடைய தோழி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ஸ்ரீ 12 ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்தான். அந்த காதலுக்காக அந்த பெண் வீட்டில் அடி எல்லாம் வாங்கி இருக்கிறார். அவருடைய நெஞ்சில் கூட அந்த தழும்பு இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அவன் அந்த காதலிலிருந்து வெளியே வந்து விட்டான்.

போதைப்பொருள் கிடையாது
அதற்குப் பிறகு அவன் சினிமாவில் நடிப்பதில் தான் பிசியாக இருந்தார் அதுபோல இப்போது அவன் தலைமுடியை வளர்த்து உடல் எடை குறைத்து இருப்பதை பார்த்ததும் பலர் பலவிதமாக பேசுகிறார்கள் அதுவெல்லாம் உண்மையே கிடையாது. ஸ்ரீக்கு குடிக்கும் பழக்கமே கிடையாது. எல்லோரும் குடிக்கிறார்கள் என்றால் கூட ஸ்ரீ எனக்கு இதில் இன்ட்ரஸ்ட் கிடையாது என்று சொல்லுவான். புகை பிடிக்கும் பழக்கம் மட்டும் உண்டு. அப்போ கூட நாங்கள் அவனிடம் கேட்டிருக்கிறோம் நீ புகை பிடிக்கிற, குடிக்க மாட்டேன் என்கிற அப்போ கஞ்சா எதுவும் அடிப்பியா என்று கேட்டபோது கூட அதற்கு என் கண் முன்பே சிலர் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் நான் எந்த நேரத்திலும் அந்த தப்பை மட்டும் செய்யவே மாட்டேன் எனக்கு அதில் இன்ட்ரஸ்ட் கிடையாது என்று சொல்லுவான்.
கஷ்டத்திற்கான காரணம்
நாங்க காபி குடிக்க போகும் போது கூட ஸ்மோக் பண்ற மாதிரி காபி ஷாப் போகலாம் என்று சொல்வார். அங்கே போனால் புகை மட்டும் பிடித்துக் கொண்டு இருப்பான். அசைவம் கூட சாப்பிட மாட்டான். அதுபோல ஸ்ரீ குடும்பம் ஆரம்பத்தில் ரொம்பவும் வசதியாக இருந்தார்கள் அதற்குப் பிறகு அவருடைய அப்பாவின் பிசினஸ் நஷ்டம் அடைந்துவிட்டது அதனால் அவர்களுடைய வீடு கார் எல்லாம் விற்று விட்டார்கள். பிறகு ஸ்ரீ சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சிலர் சம்பளமும் சரியாக கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் அதனால் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
தனிமை
அதற்கு பிறகு தன்னை தானே தனிமைப்படுத்த தொடங்கிவிட்டார். அவரை எத்தனையோ பேர் காதலிக்கிறேன் என்று தொந்தரவு செய்தார்கள் ஆனால் அவர் நடிக்க வேண்டும் இயக்குனராக வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் இருந்தார். ஆனால் அதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத போது தான் வீட்டிற்குள்ளே அடைய தொடங்கி விட்டார். இப்போது அவரை பெண்ணாக மாறிவிட்டார் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள் அதற்கு வாய்ப்பே கிடையாது.
மன அழுத்தம்
ஸ்ரீ யை பொருத்தவரையில் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான். "3" திரைப்படத்தில் தனுஷ் எப்படி தனக்குத்தானே பேசிக்கொண்டு ஒரு மாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பாரோ அதே நிலைமையில் தான் ஸ்ரீக்கும் இருக்கிறது. நான் பார்த்த வரையில் அவனுக்கு அடுத்தவர்கள் பேசுவதோ இந்த உலகத்தில் அவனை சுற்றி என்ன நடக்கிறது என்ற சிந்தனைகளே புரியவில்லை.

லைக் வாங்குவது பிடிக்காது
நீங்கள் அவரிடம் பேசி அவர் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று சொன்னால் கூட அதை அவன் விரும்ப மாட்டான். அதுபோல சோசியல் மீடியாவில் ஸ்ரீ இப்போது இவ்வளவு போஸ்ட்கள் வீடியோக்கள் போடுறான் அதுவும் ஆபாசமா போஸ்ட் போடுறேன் என்றால் இப்போ அவன் அவனாவே இல்லை என்று தான் அர்த்தம். காரணம் ஸ்ரீக்கு இப்படி வீடியோ போட்டு லைக் வாங்குவது ஷேர் வாங்குவது கொஞ்சம் கூட பிடிக்காது.
தோழியின் வேண்டுகோள்
தான் நடிக்கும் போது படத்தை பற்றி கூட நண்பர்களிடம் முதலில் சொல்லவே மாட்டான். படம் நடித்து முடித்து வெளியாக டைம்ல தான் எல்லார்கிட்டயும் சொல்லுவான் எல்லாரும் நம்மள பத்தி பெருமையா பேசணும் என்கிற எண்ணம் ஸ்ரீக்கு கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இப்போ அவன் அவனாகவே இல்லை என்பதால் தான் இதுபோல வீடியோ போட்டுட்டு இருக்கிறான். சீக்கிரமா அவன் எங்கே இருக்கிறான் என்ற விஷயம் தெரிஞ்சு அவனை சரியான மருத்துவரிடம் காட்டினால் பழைய நிலைமைக்கு வந்து விடுவான். அதற்கு தான் எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று ஸ்ரீயின் தோழி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications