இதுதான் தாய்மாமன் பாசம்.. தங்கை மகனுக்காக சிம்பு கொடுத்த பரிசு.. பலரையும் பொறாமை பட வைத்த காட்சி
சென்னை: நடிகர் சிம்பு தன்னுடைய தங்கை மகனின் பிறந்த நாளுக்கு அவர் உயரத்திற்கு பரிசுகளை வாங்கி குவித்து இருக்கிறார். இந்த பரிசு பொருள்கள் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தாய்மாமனா சும்மாவா? எவ்வளவு பாசம் என்று பாராட்டி சிம்புவின் மருமகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பொதுவாகவே தாய்க்கு சமம் தான் தாய்மாமன் என்கிற உறவு. குழந்தைகளுக்கு அம்மா இடத்தில் இருக்கும் அன்பும் பாசமும் தாய்மாமன் இடம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை. நம்முடைய சொந்த குழந்தைகளை எந்த அளவிற்கு பிடிக்கிறதோ அதைவிட நம்முடைய அண்ணன் அல்லது அக்கா தங்கை பிள்ளைகளையும் எல்லோருக்குமே பிடிக்கத்தான் செய்கிறது.

அதிலும் நடிகர் சிம்பு இப்போது செய்த செயல்தான் இணையத்தில் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைகளுக்கு பெயர் போன சிலம்பரசன் 90ஸ்களின் காலத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அப்போதே ஹீரோ ரேஞ்சுக்கு ரசிகர்களின் மனதில் சிம்மாசனமாக அமர்ந்து விட்டார். கைகளில் வித்தை காட்டியே பலரின் கிரஷ் ஆகவும் மாறி இருந்தார். அதிலும் சிம்பு, அப்பா டி.ஆர் ராஜேந்திரனின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் அடுக்கு மொழியில் பேசி பல பெற்றோரையும் கூட வியக்க வைத்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து இப்போது டாப் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர் குழந்தையாக நடிக்கும் போது இவருடைய நடிப்பை பார்த்து வளர்ந்த பல ரசிகர்கள் குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகி விட்டனர். இப்போது உள்ள 2k கிட்ஸ்கள் கூட திருமணத்தை முடித்து குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப தொடங்கி விட்டனர். ஆனால் சிலம்பரசன் இப்போதும் சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல மாதத்திற்கு ஒருமுறை சிம்புவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்திகளும் மனம் போல் வந்து விடுகிறது. அவரோடு நடிக்கும் நடிகைகளோடு சர்ச்சை, வதந்தி என்று செய்திகள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாத சிலம்பரசன் கிடைக்கும் நேரங்களில் தன்னைப் பற்றிய நெகட்டிவ் கருத்துகளுக்கெல்லாம் பதிலடியும் கொடுத்து விடுவார். அதோடு சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையில் அடிக்கடி சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராக வந்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.

அதிலும் வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கூட சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சிம்பு பற்றிய வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு டி ராஜேந்திரன் மற்றும் உஷா தம்பதியின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவருக்கு குறளரசன் என்ற தம்பியும் இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார்கள்.
அதில் சிம்புவிற்கு அவருடைய தங்கை இலக்கியாவின் குழந்தைகள் மீது அதிகமாக பாசம் உண்டு. அடிக்கடி அவர்களோடு க்யூட்டான வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது தன்னுடைய மருமகனின் பிறந்த நாளுக்கு பல கிப்ட் பாக்ஸ்களை பரிசு கொடுத்து அசத்தி இருக்கிறார். அதை பார்க்கும் ரசிகர்கள் தாய்மாமன் என்றால் சும்மாவா என்று மெச்சி கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த மாதிரி தாய்மாமன் எங்களுக்கு இல்லையே என்று ஃபீல் பண்ணியும் வருகிறார்கள். ஆனாலும் இந்த க்யூட்டான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு இப்போது வாழ்த்துக்கள் மற்றும் லைக்குகளையும் குவிக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications