கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு நிதி உதவி வழங்கிய சிம்பு.. அதுவும் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு கை, கால் செயலிழந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு பண வசதி இல்லை என்பதால் நடிகர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.
பொதுவாக எத்தனையோ பேர் மன அழுத்தத்திலும், சோகத்திலும் இருக்கும் போது சில காமெடி பார்க்கும்போது தங்களை அறியாமல் சிரித்து விடுவது உண்டு. அது போல தங்களுடைய கஷ்டங்களை மறப்பதற்காக காமெடியை தான் விரும்பி பார்ப்போம். ஆனால் அந்த காமெடியில் பலரையும் சிரிக்க வைக்கும் நடிகர்களின் வாழ்க்கை சில நேரங்களில் சோகங்கள் நிறைந்ததாக தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் நடிகர் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த வெங்கல் ராவ் வாழ்க்கையும் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வெங்கல் ராவ் நடித்திருக்கிறார். அதிலும் வடிவேலுவுடன் இவருடைய நடிப்பை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் இவருடைய முக அசைவு மற்றும் மொட்டை தலை பார்ப்பவர்களை டக் என்று சிரிக்க வைத்து விடும்.
ஆனால் வடிவேலு சில வருடங்களாக பெரிய அளவில் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் இவரும் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வெங்கல் ராவ் உதவி கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் வெங்கல் ராவ் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்தான்.
ஆரம்பத்தில் ஸ்டண்ட் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டு இருக்கிறார். அப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் வெங்கல் ராவிற்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டண்ட் செய்வதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
அதிலும் வடிவேலு ஒரு படத்தில் கோவில் வாசலில் தேங்காய் விற்கும் போது இவர் தேங்காய் வாங்க வரும்போது வெங்கல் ராவ் மற்றும் வடிவேலு இருவரும் பேரம் பேசும் காமெடி பெரிய அளவில் பலரையும் கவர்ந்தது. அதுபோல பல காமெடி வடிவேலுவுடன் இவர் நடித்திருந்தாலும் இப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் அந்த வீடியோவில் உருக்கமாக பேசியிருந்தார்.
எனக்கு கை, கால்கள் செயல்படவில்லை. நடக்கவும் பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல போதுமான பண வசதி இல்லை. திரைத்துறையை சார்ந்தவர்கள், நடிகர் சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகி சில தினங்களை கடந்து விட்ட நிலையில் யாரும் பெரிய அளவில் உதவி செய்தது போல செய்திகள் வெளியாகவில்லை.
இன்று நடிகர் சிம்பு வெங்கல் ராவிற்கு 2 லட்சம் நிதி உதவி செய்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிம்புவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். அதோடு வெங்கல் ராவ் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி சினிமாவில் நடித்து பலரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்றும் பலர் வேண்டிக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications