பிரஷரில் சிவகார்த்திகேயன்.. கன்பார்ம் ஹிட்டடிக்கும் மதராஸி.. நல்ல படைப்பாளி ஏஆர் முருகதாஸ்: பிரபலம்
சென்னை: பல வெற்றி படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், டைரக்டர் முருகதாஸ் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மதராஸி பட ப்ரோமோஷனின்போது முருகதாஸ் பேசும்போது, தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு விளக்கம் ஒன்றை தந்திருந்தார்..

அதில், "மற்ற மொழி படங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன என்றும், அந்த திரைப்படத்துறை இயக்குநர்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே படம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் இயக்குநர்கள் படத்தின் மூலம் கல்வி கற்பிக்கிறார்கள்.. அதனால்தான் மற்ற திரைப்படத் துறைகளுக்கும் தமிழ் திரைப்படத் துறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.
முருகதாஸுக்கு பொறுப்புணர்ச்சி
தமிழ்ப்பட இயக்குநர் கற்பிக்கிறார்கள் என்று முருகதாஸ் சொன்ன கருத்தை வரவேற்று, Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்.
அதில் அவர் பேசும்போது "மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிறது மதராஸி.. சிக்கந்தர் படம் ஏன் போகவில்லை என்பது உட்பட நிறைய கேள்விகள் முருகதாஸ் மீது எழுந்துள்ளதால், பலவிதமான பொறுப்புகளுக்கு முருகதாஸ் ஆளாகியிருக்கிறார்.. அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்த மதராஸி படம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
சிவகார்த்திகேயனுக்கு பிரஷர்
அமரன் படத்தில் 330 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்து விட்டதால், அடுத்த படத்தை வெற்றிப்படமாக தர வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயனுக்கும் மிகப்பெரிய பிரஷர் உள்ளது.. தன்னுடைய ரிக்கார்டை தானே முறியடிக்க வேண்டும் என்ற நெருக்கடி சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால், அதற்கேற்ற உழைப்பையும் இதில் கொட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எப்படியும் மதராசி படம் வெற்றிப்படமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதேசமயம் ஓவர்பில்டப் எதுவுமே தேவையில்லை.. ஓவர் பில்டப் செய்தால் படங்கள் மாட்டிக் கொள்கின்றன.. மதராசி படத்தை பொறுத்தவரை எதிர்பார்ப்பு சரியான முறையில் சென்றுகொண்டிருக்கிறது.
கற்பிக்கும் இயக்குநர்கள்
ஒரு பேட்டியில் முருகதாஸ் சொல்லும்போது, "மற்ற மொழி இயக்குநர்கள் வசூலை மையப்படுத்தி, பொழுது போக்கு படங்களை தருவதில் நகர்கிறார்கள்.. மக்களுக்கு உணர்வுப்பூர்வமான விஷயத்தை கடத்த நினைப்பதில்லை.. ஆனால் நம்முடைய இயக்குநர்கள் கற்பிப்பதை நோக்கமாக வைத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்..
முருகதாஸ் இப்படி சொல்ல காரணமும் உள்ளது.. ரமணா படம் ஒரு மிகப்பெரிய மூவ்மெண்ட்.. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று சொல்லி, ஊழலுக்கு எதிரான விஷயத்தை சொல்லியிருந்தார் முருகதாஸ்.. சர்கார் படத்தில் தனிமனிதனின் ஒரு ஓட்டு அத்தனை முக்கியம் என்கிறார்.. இதைதான் கற்பிப்பது என்று சொல்கிறார் முருகதாஸ்.
அழுத்தமான கருத்துக்கள்
கத்தி படத்தில் விவசாயிகளுக்கான பிரச்சனையை அழுத்தமாக சொல்லியிருந்தார்.. அந்தவகையில் இயக்குநராக ஒரு பொறுப்புணர்ச்சியுடன் படங்களை தருகிறார் முருகதாஸ்.. இதைதான் கற்பித்தல் என்கிறார்..
தன்னுடைய படைப்புகள் மூலமாக மக்களுக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.. அப்படி சொல்லும் கருத்துக்கள் எடுபடாமல் போகலாம். ஆனால் தொடர்ந்து கருத்துக்களை தன்னுடைய படங்களில் சொல்லி கொண்டுதான் இருப்பேன் என்கிறார் முருகதாஸ்..
வெற்றிமாறனை ஏன் கொண்டாடுகிறோம்
வெற்றிமாறனை ஏன் அனைவரும் கொண்டாடுகிறார்கள்? அவர் எப்போது ரூ.500 கோடிக்கு படம் எடுத்தார்? 300, 400 கோடி கலெக்ஷனை தந்தாரா? கிடையவே கிடையாது.. கோடிகளில் கலெக்ஷன் என்பது முக்கியமில்லை.. சொல்ல வரும் கருத்துக்கள், மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.. இப்படி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டைரக்டர்களைதான்
முருகதாஸ், எஜுகேடட் டைரக்டர்ஸ் என்கிறார்.. ஒரு படைப்பின் தோல்வி என்பது, படத்தினுடைய தோல்விதானே தவிர, அந்த படைப்பாளியின் தோல்வி கிடையாது" என்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications