விஜய் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்.. உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நேரில் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷை நேரில் சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கொடுத்திருக்கிறார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து தற்போதும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டாக ஆனது.

அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு அதிகமான வசூல் பெற்ற படங்கள் வரிசையில் இணைந்து இருக்கிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.
சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் வரவழைத்து அவருக்கு சப்ரைஸ் கிப்ட் கொடுத்திருக்கிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது. அதுபோல குகேஷ்க்கு இந்தியா ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தமிழக அரசும் முகேஷுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்தது. அதுபோல பல பிரபலங்களும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அலுவலகத்தில் வரவைத்து குகேஷுக்கு கேக் வெட்டி பார்ட்டி செய்து இருக்கிறார். அதை மட்டும் அல்லாமல் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications