தோற்றுப்போன முதல் காதல்.. விஜய் டிவியில் இருக்கும் போது நடந்த சம்பவம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினம் நாளை உலகெங்கும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய முதல் காதல் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிவடைந்து விட்டது என்றும், அந்தப் பெண் யார் என்றும் அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

முதல் காதல் என்பது எல்லாராலும் மறக்க முடியாது. அந்த காதலுக்கு இருக்கும் உணர்வே வேற வகையில் இருக்கும். அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் முதல் காதல் கல்யாணத்தில் கை கூடுகிறது. திருமணத்திற்கு பிறகும் அந்த காதல் தொடர்வது அபூர்வமாகத்தான் இருக்கிறது.

Sivakarthikeyan Vijay TV

அதே நேரத்தில் முதல் காதல் ஃபெயிலியர் ஆனாலும் அடுத்த காதலில் வெற்றி பெற்று வாழ்க்கையிலும் ஜெயித்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் அடி எடுத்து வைத்து தற்போது டாப் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு
தீபாவளிக்கு வெளியாகி செம ஹிட் அடித்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

Sivakarthikeyan Vijay TV

அந்தப் படத்திற்கு தற்காலிகமாக எஸ்கே 24 என பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கான டைட்டில் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதுபோல சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் அந்த படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

அதுபோல பராசக்தி என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார். அந்த படம் குறித்த போஸ்டர் வெளியானதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் சிவகார்த்திகேயன் பேட்டிகளில் கலந்து கொள்கிறார். அந்த பேட்டிகளும் கூட இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sivakarthikeyan Vijay TV

சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களுக்கும் மட்டுமல்லாமல் சக நடிகர்களின் பட வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுபோல தன்னுடைய முதல் காதல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பலருடைய கவனத்தை பெற்று வருகிறது. அதில் நான் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால் அது ஒன் சைடு லவ் என்பதால் கைகூடாமல் போய்விட்டது.

Sivakarthikeyan Vijay TV

அந்தப் பெண் அவருடைய லவ்வரோடு போய்விட்டதால் அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டது. தன்னுடைய காதல் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு காதல் அதுதான் என்று பேசி இருக்கிறார். அதோடு விஜய் டிவியில் வேலை பார்க்கும் போது அந்த பெண்ணை ஒருமுறை ஷாப்பிங் மாலில் வைத்து சிவகார்த்திகேயன் பார்த்திருந்தாராம். ஆனால் அந்த பெண்ணிடம் சிவகார்த்திகேயன் பேசவில்லையாம்.

அந்த பெண் முன்பு காதலித்த பையனோடு இல்லாமல் வேறு ஒரு நபரோடு அந்த ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்தாராம். அப்போது நமக்கு கிடைக்காத பெண் அவனுக்கும் கிடைக்கவில்லை என்று தான் சந்தோஷப்பட்டதாக அதில் கூறியிருக்கிறார். அதோடு இந்த காதல் தோல்விக்கு பிறகு தான் ஆர்த்தியை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+