Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேட்டையை பார்த்தீங்களா..சிவகார்த்திகேயன் ரூபத்தில் சிம்பு, தனுஷை இப்படி கலாய்க்குறாங்களே..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.

இந்தப் படத்தின் சிம்பு கதாபாத்திரத்தையும், தனுஷ் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த ஜகமே தந்திரம் படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தையும் சிவகார்த்திகேயன் கலாய்ப்பது போன்ற மீம்ஸ் சமூக வலைதளங்கள் காமெடியாக பரவி வருகிறது.

பார்பதற்கு வடிவேலு காமெடி போல இருக்கும் இந்த மீம்ஸ் பலரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மும்பை பார்முலா

மும்பை பார்முலா

சாதாரண ஹீரோ டானாக மாற வேண்டும் என்றால் உடனே மும்பைக்கு கிளம்பி விடுவார். இந்தப் பழக்கம் நாயகன் படம் தொட்டு பல படங்களில் இன்று வரை தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டம் போல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்று ஹீரோ மும்பைக்கு சென்று டானாக மாறுவார், இல்லையென்றால் சிறுவயதில் ஹீரோ படும் கஷ்டங்கள் அவரை டானாக மாற்றிவிடும். இந்த மும்பை பார்முலா தமிழ் சினிமா மட்டுமல்ல தற்போது உலகமெங்கும் மெகா ஹிட் ஆன கேஜிஎப் படத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஜகமே தந்திரம் சுருளி

ஜகமே தந்திரம் சுருளி

ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜகமே தந்திரம். நடிகர் தனுஷ் இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மதுரையில் சின்ன ரவுடியாக இருக்கும் தனுஷ் லண்டன் சென்று கேங்ஸ்டர் ஆக மாறுவது படத்தின் கதை. இந்தப் படம் நேரடியாக ஓடிடி யில் ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், நல்லவேளை தாங்கள் தப்பித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு தான் படம் இருந்தது.

இயக்குனர் ஹீரோ கெமிஸ்ட்ரி

இயக்குனர் ஹீரோ கெமிஸ்ட்ரி

கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் சிம்புவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் போல, ஏனென்றால் ரெண்டு பேருமே பட அறிவிப்போடு சரி அந்த படத்தின் ரிலீஸ் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. அப்படி இருந்தும் தற்பொழுது இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.ஐசரி கணேஷ் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் இருந்ததால் எந்த இழுவையும் இல்லாமல் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் நியூ வெர்ஷன் என்று ஒரு தரப்பினர் இப்படத்தை பற்றி கூறி வருகின்றனர்.

சிம்பிளா டானான சிவகார்த்திகேயன்

சிம்பிளா டானான சிவகார்த்திகேயன்

ஜகமே தந்திரம் சுருளியாக நடித்த தனுசையும், வெந்து தணிந்தது காடு முத்துவாக நடித்துள்ள சிம்புவையும் சிவகார்த்திகேயன் கலாய்ப்பது போல் மீம்ஸ்கள் பார்ப்போரை சிரிக்க வைத்து வருகிறது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் டான்.இந்தப் படத்தில் கல்லூரியில் மாஸ் ஸ்டூடண்டாக டான் என்னும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். இதனை வைத்து சிம்பு, தனுஷிடம் சிவகார்த்திகேயன் "நீங்களெல்லாம் டான் ஆகணும்னா.. மும்பை, லண்டன், போகணும்.. நான் காலேஜ் போனா போதும்.." என்று கூறுவது போன்ற மீம்ஸ்கள் கலக்கலாக பார்த்தவுடன் சிரிக்க தூண்டும் வகையில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+