மனைவியின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இதுவல்லவா சர்ப்ரைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு அமரன் கெட்டப்பில் வந்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அசத்தி இருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்து பலரையும் வியக்க வைத்திருக்கிறது. 250 கோடி கிளப்பில் இணைந்த கோலிவுட் நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார்.

sivakarthikeyan vijay tv

இதை அடுத்து அமரன் பட கெட்டப்பில் தன்னுடைய மனைவிக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அவருடைய மனைவி கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அமைதியாக சிவகார்த்திகேயன் நின்று கொண்டிருக்கிறார்.

திடீரென்று தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்து அவருடைய மனைவி ஆர்த்தி திரும்பி பார்க்கும்போது முதலில் அதிர்ச்சியாகி பிறகு கணவரை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைகிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்த நிலையில் இதுவல்லவா சர்ப்ரைஸ் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அன்றிலிருந்து இன்று வரை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல பிரபலங்களும் இந்த திரைப்படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை போன்றவை மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ராணுவ வீரரின் உண்மை கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வளவு பாராட்டுகளை பெற்று வருகிறதோ அதேபோல ஒரு சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

தன்னை பற்றி எவ்வளவோ வதந்திகள் வந்தாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான் சிவகார்த்திகேயனின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்தது. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா மூன்று வயதாக இருக்கும்போது வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பாடி பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். தற்போது அவருக்கு 13 வயதாகும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் குட்டி பாப்பா இவ்வளவு வளர்ந்துட்டாரா? என்று அதிகமான கமெண்ட்கள் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+