சிவக்குமாரின் எமோஷனல்.. சூர்யா மீது பாசம் ஓகே, நயன்தாரா 4 பேக்ஸ், அர்ஜூன் ஜிம்பாடி தெரியலயே: பிரபலம்
சென்னை: சிவக்குமார் ரெட்ரோ ஆடியோ லாஞ்ச் விழாவில், "என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா? " என்று பெருமையாக பேசியிருந்தார்.. எவன்டா என்று சிவக்குமார் பேசியது சலசலப்பை உண்டுபண்ணினாலும், முதன்முதலில் சிக்ஸ்பேக் வைத்த நடிகர்கள் யார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது. இந்நிலையில், இயக்குனர் நந்து சேனல் ஒன்றிற்கு பேட்டிற்கு சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நந்து, "தமிழகத்தில் உடம்பை காட்டி நடித்தது கரிகாலன் என்ற நடிகர்.. இப்படி உடம்பை காட்டி நடித்தவர்கள் நிறைய பேர் உண்டு.. ஆனால் சிக்ஸ் பேக் என்று சொல்லப்படும், வயிற்றில் அடுக்குகளை வைத்து காட்டியது தென்னிந்தியாவில் அல்லு அர்ஜூன்தான்.

சிக்ஸ்பேக் சூர்யா
தமிழில் விஷால், சூர்யா இருவருமே ஒரே காலகட்டத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்தனர். சூர்யா படம் வெளியான போதுதான், விஷாலின் "சத்யா" என்ற படமும் வெளியானது .. இதில், நயன்தாராவும் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். நயன்தாரா உடல்வாகு அப்போது பெரிதாக பேசப்பட்டது.. சிக்ஸ் பேக் என்று அதனை சொல்ல முடியாது.. 4 பேக்ஸ் வைத்திருந்தார் நயன்தாரா. சிவக்குமார் நயன்தாராவின் 4 பேக்ஸ்குகளை, விஷால் பேக்குகளை பார்த்ததில்லை.
கூகுளில் யார் வேண்டுமானாலும் நயன்தாராவின் அந்த 4 பேக்ஸ் கவனிக்கலாம்.. இதே காலகட்டத்தில் பில்லா படம் வந்தாலும் அதில், அந்த 4 பேக் நயன்தாராவுக்கு குறைந்துவிட்டது. நயன்தாராவை ஒப்பிட்டு பேக்ஸ் காட்ட வேண்டுமானால் தனுஷை சொல்லலாம்.
எம்ஜிஆர் , அஜித், விஜய், ரஜினி
ஆனால், இதுபோன்ற 4 பேக்ஸ், 6 பேக்ஸ்களை, எம்ஜிஆர், விஜய், ரஜினி , அஜித் என யாரும் செய்யவில்லை ஏன்? இவர்களுக்கெல்லாம் சிக்ஸ் பேக் வைக்க தெரியாதா என்ன? இவர்கள் அனைவருமே மக்களின் நாயகர்களாகவே இருந்து வருபவர்கள். சிக்ஸ்பேக் காட்டியவர்களைவிட, இவர்கள்தான் சூப்பர் ஸ்டார்கள்.. ஆனால், சிக்ஸ் பேக் வைத்தால் உடலில் என்ன நடக்கும் என்று தெரிந்ததால்தான் எம்ஜிஆர் உட்பட யாருமே வைத்துக் கொள்ளவில்லை.
சிக்ஸ் பேக் என்பது பெருமையாக பேசப்பட விஷயம் இல்லை.. உடம்பை வருத்தி ஏன் நடிக்கணும்? சிக்ஸ் பேக் வைத்தாலும் படம் ஓடப்போறதும் இல்லை.. சிந்துபைரவி என்ற படத்தில் சிவக்குமார் ஐயா நடித்திருந்ததற்கு சிக்ஸ் பேக்ஸ் தேவையில்லையே? கதையும் நாயகனும் சரியாக இருந்தாலே, படம் ஹிட்டாயிரும்.
அர்ஜூன் செய்யாத சாகசமா
அர்ஜூன் சார் காட்டாத உடம்பா? அவர்தான் முதன்முதலில் சட்டையை கழட்டி புருஸ்லீ போல செய்திருந்தார்.. அர்ஜூனுக்கு பிறகுதான் சரத்குமார் அப்படி முயற்சித்தார்.. சூர்யா இளம் வயதில் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருந்தார்.. ஆனால், சார்பாட்டாவில் ஆர்யாவுக்கு வயதாகியும், சிக்ஸ் பேக் வைத்திருந்தார்.. அவரைவிட வயது அதிகமான ஷாருக்கான் இப்போது 60 வயதில் சிக்ஸ் பேக் செய்துள்ளார்.
சிவக்குமார் தெரியாமல் பேசுவதால், அது தவறாக கொள்ள வேண்டாம். புத்திர பாசத்தினால் பேசுகிறார் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். அவர் தெரிந்துதான் பேசினார் என்பதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்.
உண்மையை சொன்ன சிவக்குமார்
அதுமட்டுமல்ல, அந்த நிகழ்வில் ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னார் சிவக்குமார்.. வீட்டிலேயே ரொம்ப அமைதியான பையன் சூர்யா.. நடிக்கவே வரமாட்டேன் என்று நினைத்தபோது, காலமும், சூழ்நிலையும், ஜோசியமும், மகனை நடிகனாக்கியது என்று உண்மையை பேசினார்..
அதேபோல, டைரக்டர் வசந்த்துக்கு இப்போது நன்றி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. ஆனாலும் இன்று சிவக்குமார் சொல்கிறார். முழுக்க முழுக்க பாசத்தின் வெளிப்பாடாகவே இருந்த சிவக்குமார் பேச்சை காமெடியாக்குவது வேதனையானது" என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications