காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கும் நடிகை ராதிகா.. ஓடோடி வந்து சிவகுமார் செய்த செயல்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு காலில் அடிபட்டு இருக்கும் நிலையில் தன்னுடைய அண்ணனாக நடிகர் சிவகுமார் வந்து என்னை பார்த்ததோடு எனக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் என்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்ப வரைக்கும் முன்னணி கேரக்டர்களில் திரைப்படங்களில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சித்தி சீரியலில் தொடங்கிய அவருடைய பயணம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நடிகையாக மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளை கொண்டுள்ள ராதிகா அரசியலையும் விட்டு வைக்காமல் இப்போது பாரதிய ஜனதாவில் இணைந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு இருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ராதிகாவிற்கு பெரும் துயரம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. அதன் காரணமாக ராதிகா நடக்க முடியாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவை பார்ப்பதற்காக நடிகர் சிவகுமார் ராதிகாவின் வீட்டிற்கே வந்து இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ராதிகா பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே ராதிகா மற்றும் சிவகுமார் அண்ணன் தங்கையாக நடித்த "பாடாத தேனீக்கள்" திரைப்படத்தில் இடம் பெற்ற "வண்ண நிலவே" என்ற பாடலின் வரிகளை சேர்த்து அந்த பாடலில் சிவக்குமாரோடு எடுத்த புகைப்படங்களையும் ராதிகா பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்தில் சிவகுமாரின் மகளாக சீரியல் நடிகை சுஜிதா தான் நடித்திருக்கிறார்.
அதையும் அந்த பதிவில் தெரியப்படுத்தி இருக்கிறார். மேலும் "சிவகுமார் அண்ணா நான் காலில் ஏற்பட்ட அடியிலிருந்து மீண்டு வருவதால் எண்னை வந்து பார்த்ததில் மகிழ்ச்சி. நாங்கள் பல படங்களையும் நினைவுகளையும் பேசி பகிர்ந்து கொண்டோம்" என்று அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவின் இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள், நடிகர்கள் என்று பலரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் வரவேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications