யாருன்னு தெரியாது, ஆனால் சோறு போட்டதாக சொல்லுறாங்க.. மோசமான அந்த செயல்! வருத்தப்பட்ட சூரி
சென்னை: நடிகர் சூரி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போது சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல வேலைகள் செய்திருந்தார். அப்போது சூரிக்கு உதவியதாக சிலர் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து சமீபத்தில் சூரி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
பொதுவாக ஒரு சிலர் எவ்வளவோ கஷ்டப்படுவார்கள், அப்போது யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் கஷ்டப்பட்டவர் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அந்த நபர் யார் தெரியுமா? எங்க சொந்தக்காரன் தான், எங்க பங்காளி... எங்க ஒன்னு விட்ட சித்தியோட அத்தை மகன் என்று பல உறவு முறைகளையும் கொண்டாடி வருவார்கள். இது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் பார்த்து இருப்போம்.

சூரியின் ஆரம்ப காலம்
அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் இருந்து சூரி சென்னைக்கு வந்து பல கஷ்டங்கள்பட்டு இருந்தார். ஆரம்பத்தில் பெயிண்ட் அடிப்பது, எலக்ட்ரீசியன் வேலை, ஹோட்டல் வேலை என்று பல வேலைகளை செய்திருந்தார். சினிமாவிலும் பல எடுபுடி வேலைகளை செய்து இருக்கிறார். பலரிடம் கெஞ்சி கூத்தாடி சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பரோட்டா சூரி
அதற்கு பிறகு சூரி என்பதை விடவும் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதற்கு முன்பு சீரியல், சினிமா என்று இவர் பல இடங்களில் நடித்திருந்தாலும் எதிலுமே இவருடைய முகம் யாருக்கும் நினைவில் கிடையாது. ஆனால் ஒரு திரைப்படம் இவருக்கு ஹிட் ஆனதும் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூரியை ஒரு காமெடி நடிகனாக காட்டியது.
கதாநாயகனாக அவதாரம்
அதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா என்று பலருடைய படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வந்தார். இவருடைய காமெடி வாழ்க்கையை வெற்றிமாறன் அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விடுதலை திரைப்படத்தில் சூரியின் வித்தியாசமான நடிப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
சூரியின் ஹிட் திரைப்படங்கள்
அதற்குப் பிறகு விடுதலை 2, கருடன், மாமன் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு பேசுவதற்கு எந்த மேடை கிடைத்தாலும் தான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் இப்போது தனக்கு இருக்கும் வசதி குறித்து பெருமையாகவும் அதே நேரத்தில் ஓவர் பில்டப் இல்லாமலும் சூரி பேசுவார். தன்னைப்போல பலரும் சாதிக்க வேண்டும் என பேசுவார்.
தன்னம்பிக்கை வார்த்தை
இன்று கஷ்டப்படுபவர்களுக்கு நாளை கண்டிப்பாக வாழ்க்கை மாறும், நம்முடைய உழைப்பை மட்டுமே நாம் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும். அதில் உண்மையாக மட்டும் இருந்தால் போதும் கண்டிப்பாக வாழ்க்கை மாறும் என்று தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூரிக்கு ஆரம்ப காலகட்டத்தில் நான் உதவினேன், நான் சாப்பாடு கொடுத்தேன், நான் துணி வாங்கிக் கொடுத்தேன் என்று சிலர் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சூரியின் பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூரி என்கூட நிறைய பேர் பழகி இருக்காங்க அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னை பார்க்காதவங்க பழகாதவங்க கூட சூரி வருவான் நான் அவனுக்கு என் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எண்ணி கூட பாக்காம அள்ளி கொடுப்பேன், அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பேன் என்று தற்பெருமையாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருது.

வீண் விளம்பரம்
ஒருத்தன் கீழே இருந்து கஷ்டப்பட்டு இருந்து மேலே வரும்போது எங்க வேணாலும் யாரு வேணாலும் ஜாயிண்ட் அடிக்கணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. உதவி செய்தவர்கள் அது பற்றி பேசினால் சந்தோஷம். இதே போல இன்னும் சிலர் உதவ வேண்டும் என்று நினைக்கலாம் ஆனால் யாருன்னு தெரியாதவர்கள் கூட நான் உதவினேன் என்று சொல்வது தான் பார்க்க வேதனையாகவும், கடுப்பாகவும் இருக்கிறது என்று அந்த பேட்டியில் சூரி பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications