சன் டிவியின் ஹிட் சீரியலில் நடிகர் சூரி.. அதுவும் இத்தனை வருடத்திற்கு முன்பே..! இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: ஒரு சிலர் ஆரம்ப காலகட்டத்தில் அதிக அளவில் கஷ்டப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய உழைப்பின் காரணமாகவே திடீரென்று அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அந்த மாதிரி தான் நடிகர் "சூரி" இன்று புகழின் உச்சத்தில் இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் அவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சூரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அது பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது. அதற்கு பிறகு அவர் மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் விடுதலை திரைப்படத்தில் அனைவரையுமே தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் மிரட்டி இருந்தார். இந்த நிலையில் அவர் பற்றி சில தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகர் சூரி "மதுரை"யை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மதுரையில் இருந்து நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் பல வாய்ப்புகளுக்காக தேடி அலைந்து சின்ன சின்ன நகைச்சுவை கேரக்டரில் நடிக்க தொடங்கி இன்று கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சின்ன சின்ன திரைப்படங்களில் சூரி நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு ஒரு துணை நடிகராக பெரிய அளவில் அறிமுகம் கிடைத்தது "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிட்டு பலரையும் வியக்க வைத்திருந்தார். இப்போதும் பல ஊர்களில் பரோட்டா சாப்பிடும் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை வைத்தே அந்த திரைப்படத்தில் ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிடும் போட்டி வைக்க அதில் 50 புரோட்டாக்கள் சாப்பிட்ட சூரி தன்னை சுற்றி சூழ்ச்சிகள் நடக்கிறது என்று தெரியாமலேயே தான் சாப்பிட்டதை தவறு என்று சொன்னவர்களிடம் அந்த கோட்டை எல்லாம் அழிங்க நான் மீண்டும் முதலில் இருந்து சாப்பிடுறேன் என்று கெத்து காட்ட அது பெரிய அளவில் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியின் காரணமாகவே சூரிக்கு அடுத்தடுத்து திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனோடு நடித்த இவருக்கு "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படம் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து விட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சூரி அதிகமாக சிவகார்த்திகேயனுடன் நடித்து வந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி இப்போது முன்னணி கதாநாயகனாக மாறி இருக்கிறார். ஆனால் இவர் ஆரம்ப காலம் அந்த அளவிற்கு எளிமையானதாக இல்லை. இவர் ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுவும் சன் டிவியில் பெரிய அளவில் ஹிட்டடித்த "திருமதி செல்வம்" சீரியலில், செல்வம் வேலை பார்க்கும் ஒர்க் ஷாப்பில் சூரி வேலை பார்க்கும் நபராக நடித்திருக்கிறார்.
திருமதி செல்வம் சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் செல்வம் ஒர்க் ஷாப் அந்த சீரியலில் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும். அந்த இடத்தில் செல்வத்திடம் சின்ன பையனாக வேலை பார்க்கும் சூரி புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவருக்கு உழைப்போடு திறமையும் இருந்தால் எப்போது அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி தான் இப்போது சூரிக்கு கிடைத்திருக்கிறது என்று பலர் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்












Click it and Unblock the Notifications