இந்த விஷயத்தில் தான் ஏமாற்றமாக இருக்கிறது.. விஜய்யின் அரசியல் செயல்பாடு.. ஓபனாக பேசிய சூரி
சென்னை: இன்று சட்டப்பேரவையில் விஜய் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் நிலையில் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் அவருடன் நடித்த அனுபவங்கள் பற்றியும் நடிகர் சூரியும் பெருமையாக பேசி இருக்கிறார். இதை விஜய் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் சூரி பேட்டி
சூரி நடித்த மண்டான்டி திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. அதற்காக பிரமோஷனல் சூரி பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய குடும்பத்தோடு இந்த பிரமோஷனனில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்போது 10 வயது சிறுவன் கூட சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசுவது ஆரோக்கியமான விஷயம்.

ஏமாற்றம்
இதுவரைக்கும் திரைப்படத்தை தான் எல்லோரும் ஆர்வமாக பார்த்திருப்பார்கள். ஆனால் இப்போ சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது பற்றியே பேசுகிறார்கள். விஜய் முழுமையாக சினிமாவை விட்டு போய் விட்டேன் என்று சொன்னது தான் ஏமாற்றமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்கள் போல எனக்கும் ஆசை.
குழந்தை போல சிரிப்பு
நான் அவருடன் வேலாயுதம் படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது அவர் ரொம்பவும் இயல்பாக பேசிக்கொண்டு இருப்பார். நாம ஏதாவது காமெடி பண்ணுனா கூட அவர் ரொம்பவும் சிரிப்பாரு. அவர்கள் சிரிக்க ஒரு ஆரம்பித்து விட்டால் இது சீக்கிரமாக நிறுத்த மாட்டார். அதை பார்க்கறதுக்கு அழகா இருக்கும். அது போல நான் அந்த சமயத்தில் கார் வாங்கி இருந்தேன். அதை அவரிடம் ஒட்டிப் பார்க்கச் சொன்னேன். அவரும் ஓட்டி பார்த்துட்டு நல்லா இருக்கு என்று சொன்னாரு. கூட இருக்கிறவர்களை மோட்டிவேஷன் பண்ணிட்டு இருப்பாரு என விஜய் பற்றி சூரி பெருமையாகவே பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
