நடிகர் சஞ்சீவ், விஜய் போல நடிக்க காரணமே இதுதான்.. நான் கூடவே இருந்து பார்த்தேன்.. நடிகர் ஸ்ரீ ஓபன்
சென்னை: சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீ, நடிகர் சஞ்சீவ் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நடிகர் சஞ்சீவ் விஜய் போல நடிக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்று ஸ்ரீ விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகர் ஸ்ரீ 2001 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, பிள்ளை நிலா, கனா காணும் காலங்கள், தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த வானத்தைப்போல சீரியலிலும் சின்ராசு கேரக்டரில் நடித்திருந்தார்.

அதே சீரியலில் நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார். நடிகர் சஞ்சீவ் அவருடைய நண்பரான நடிகர் விஜய் போலவே ஆக்டிவிட்டி காட்டுகிறார் என்பது ஆரம்பத்தில் இருந்தே அவர் சந்திக்கும் விமர்சனம். வானத்தைப்போல சீரியலில் கூட சஞ்சீவ் கெத்தாக விஜய் போலவே தன்னுடைய அறிமுக காட்சியில் நடித்திருந்தார். தெறி படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பது போல வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் போலீசாக நடித்து மிரட்டி இருந்தார்.
இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அதிகமாக சஞ்சீவை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து சஞ்சீவி நண்பரும் அந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகருமான ஸ்ரீ சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். சஞ்சீவும் நானும் காலேஜ் படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். நடிப்பை பார்த்து நான் பல நேரங்களில் வியந்து இருக்கிறேன். சஞ்சீவ் சீரியல்களில் அதிகமாக நடித்ததால் தான் அவருக்கு சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதோ என்று கூட எனக்கு தோணும்.

காரணம் சஞ்சீவால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே நடிக்க முடியும். அவ்வளவு திறமை இருந்தும் அவர் விஜய் போலவே நடிக்கிறார் என்று விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஒருவர் போல காபி செய்கிறார் என்றால் ஒரு இடத்தில் செய்யலாம், இரண்டு இடத்தில் செய்யலாம் ஆனால் எப்போதுமே ஒருவரால் எப்படி அப்படி காப்பி செய்ய முடியும். சஞ்சீவிவிடம் இயக்குனர்கள் தான் இன்னும் கொஞ்சம் பெர்பார்மன்ஸ் பண்ணுங்க என்று சொல்கிறார்கள்.
வானத்தைப்போல சீரியலில் எனக்கும் சஞ்சீவ்க்கும் ஒரு காட்சி இருந்தது. இருவரும் ஃபைட் பண்ணுவோம். அப்போது சஞ்சீவிடம் இயக்குனர் நீங்கள் இன்னும் கொஞ்சம் பெர்பார்மன்ஸ் பண்ணுங்க என்று சொல்கிறார். அதேபோல நான் செய்தால் நீங்கள் இவ்வளவு செய்ய வேண்டாம் நீங்கள் கம்மியா நடிங்க என்று சொல்கிறார்கள். சஞ்சீவ் கெத்தான கேரக்டரில் நடிப்பதற்கு காரணம் இயக்குனர்கள் தான்.

அவர்கள் சொல்லி தான் சஞ்சீவ் இப்படி நடிக்கிறார். அதுபோல சஞ்சீவ் விஜய் போல வேண்டும் என்று நடிக்கவில்லை அது அவருக்கு இயல்பாகவே வருகிறது. அவர் அவராக தான் இருக்கிறார். நான் இதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு அவர் விலகியதால் தான் நான் அந்த சீரியலில் நடித்தேன். சஞ்சீவ் எப்போதுமே தன்னோடு நடிப்பவர்கள் இன்னும் பெஸ்ட்டாக நடிக்க வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் அவருடைய வளர்ச்சி பிடிக்காத சிலர் தப்பு தப்பாக பேசினார்கள் என்று அந்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ பேசியிருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications