நான் SC-யா பிறந்தது தப்பா? அந்த நடிகை என்னை பார்த்து கேட்ட வார்த்தை! நடிகர் ஸ்ரீ குமார் எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் தான் SC கேட்டகிரியை சேர்ந்தவர் என்பதால் சினிமா துறையில் பட்ட அவமானங்கள் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். சினிமா துறையிலும் ஜாதிகள் பார்த்து பலர் பழகுகிறார்கள் என்று வெளிப்படையாக ஸ்ரீ பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பல வருடங்களுக்கு முன்பே பாரதியார் பாட்டு பாடி இருந்தாலும் இப்போ உள்ள மார்டன் உலகத்திலும் ஜாதிகளின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனாலேயே இன்னும் குடிக்கிற தண்ணீர் தொட்டியில் மலம் கழிக்கிற அரக்கர்களும், ஆணவ படுகொலைகளை அசால்ட்டாக செய்யும் ஜாதி வெறி பிடித்தவர்களை பற்றி தினமும் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாதாரணமாக கிராமத்தில் தான் இந்த மாதிரி ஜாதிகள் பார்ப்பார்கள் என்று ஒரு பேச்சு நிலவி வருகிறது. ஆனால் அது கிராமத்தில் இல்லை படித்து பல பதவிகளில் இருந்தாலும், சிலருடைய மனதிற்குள் இன்னும் இந்த ஜாதிகளின் வெறி இருக்கத்தான் செய்கிறது என்று இப்போது சமீபத்தில் நடிகர் ஸ்ரீ பேசிய வீடியோவில் இருந்து தெரிகிறது. அந்த வகையில் நடிகர் ஸ்ரீ சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசன் மகன்தான்.
2001 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற சீரியல் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஸ்ரீ அதைத் தொடர்ந்து கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளை நிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீ பேசுகையில், என்னுடைய அப்பா தாஸ்புரம் ஸ்லிம் ஏரியாவில் இருந்து வந்தவர். அதனால அவர் எஸ்சி, அவர் எஸ்சி என்பதால் நானும் எஸ்ஸி தான். அதனால் நான் எஸ்சி என்ற காரணத்தால் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். சில நேரங்களில் சிலர் அப்பர் காஸ்ட் என்கிற பெயரில் நம்மை மட்டம் தட்டும்போது நான் சும்மா இருக்க மாட்டேன். அந்த நேரத்தில் நான் ஈக்குவல எல்லாத்தையும் பாருங்க என்று சொல்லுவேன். அதனால பல பிரச்சனைகள் வந்திருக்கு.
ஒருமுறை நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக போயிருந்தேன். பொதுவா என்னுடைய தமிழ் பேச்சு வழக்கில் சென்னை லாங்குவேஜ் வரும் அந்த மாதிரி தான் அந்த படத்தில் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு ஒரு நடிகை... அதுவும் சீனியர் நடிகை தான் அவங்க என்னை பார்த்ததும் என்ன இவன் இப்படி பேசிகிட்டு இருக்கான் இவன் அந்த ஆளு தானா என்று கேட்டார்.
அப்போது அருகில் இருந்தவர் ஆமாம் வேறு வழியில்ல அதற்காகத்தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி சினிமா துறையில் நான் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். திறமைக்கு மட்டுமல்லாமல் சாதியை வைத்து மதிப்பிடுவது தான் இன்னும் இருக்கிறது. இது போல நான் ஒரு சில இடங்களில் அவமானப்படும்போது எதிர்த்து பேசியதால் பல பிரச்சனைகளையும் அனுபவித்து இருக்கிறேன்.
அதுபோல பணம் இல்லாமலும் நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன் ஒருமுறை எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் சில பிரச்சனை வந்தது. அதனால் அவரிடம் நான் தனியாக சாதித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். அப்போ ஒரு ஆறு வருஷம் நான் தனியா இருந்தேன். அந்த நாட்களில் பணத்தின் அருமையை நான் புரிந்து கொண்டேன்.
பணம் இல்லாமல் நான் நாய் படாத பாடுபட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய காருக்கு பெட்ரோல் போட கூட காசு கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய காருக்கு டியூ கட்டாததால் பைனான்ஸ்காரர்கள் காரை தூக்க வந்துட்டாங்க. அதனால ஆங்கர் விஜய் தெரியும்ல ஜீ தமிழ் தொகுப்பாளராக இருக்கும் விஜய்... அவன் வீட்டில் அவனிடம் கெஞ்சி கூத்தாடி அவனுடைய வீட்டுக்கு பின்னாடி என்னுடைய காரை ஒழித்து வைத்திருந்தேன்.
அதற்குப் பிறகு அம்மாவை சில நேரங்களில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகும் போது பார்க்கிங் கட்டுவதற்கு ரூ 5 இல்லாமல் அந்த காருக்குள்ளேயே நான் உட்கார்ந்து இருக்கிறேன். இதெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக ஸ்ரீகுமார் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications