பழைய நிலைக்கு மாறிய நடிகர் ஸ்ரீ.. ஆபாச வீடியோக்கள் அழிப்பு.. தன்னை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீ பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையுடன் அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அந்த வீடியோக்களை ஸ்ரீ டெலிட் செய்திருக்கிறார். அதோடு தன்னைப் பற்றி பரவி வந்த வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பெரிய அளவிற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களின் மனதில் ஆரம்பத்திலேயே விதைத்து விடுகிறார்கள். ஆனால் திடீரென்று அவர்கள் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுகிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் ஸ்ரீ. ஸ்ரீ ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க தொடங்கினார். அந்த சீரியலுக்கு பிறகு வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Vijay TV actor Shri

அழகான நடிப்பு

முதல் திரைப்படமே இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரீக்கு முதல் படத்தில் அனுதாபமும் கூடிவிட்டது. அதை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, இறுகப்பற்று போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கும் வகையில் கதை தேர்வு செய்திருந்தார்.

Vijay TV actor Shri

கண்டுகொள்ளாத போஸ்ட்

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அவருடைய எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. இறுகப்பற்று திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே சூட்டிங் முடிவடைந்துவிட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு தான் வெளியானது அந்த திரைப்படத்திலிருந்து பிரமோஷன் பணிகளில் கூட ஸ்ரீ கலந்து கொள்ளவில்லை. அதுபோல கடந்த ஒரு வருடங்களாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஒரே அறையில் இருந்த மாதிரியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

பலருடைய கருத்து

காரணம் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்ரீ மாரி இருந்தது கூட இருக்கலாம். ஆனாலும் கடந்த வாரத்தில் ஸ்ரீ வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரைகுறை உடையுடன் ஆபாச செய்கை செய்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதனால் இவர் எப்படி மாறிவிட்டாரே இவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும், இவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் இவர் மன அழுத்தத்தில் இருக்கிறார், போதை போல பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர்.

வீடியோ டெலிட்

அதே நேரத்தில் ரசிகர்களும் அவருடைய நலம் விரும்பிகளும் அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க வேண்டும் அவர் இப்போது தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார் என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த ஆபாச வீடியோக்களை ஸ்ரீ டெலிட் செய்திருக்கிறார்.

வதந்திக்கு பதில்

அதோடு ஸ்ரீ போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்று பரவி வந்த வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது தான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆறு மாதம் நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீயின் நெருங்கிய தோழி ஒரு பேட்டியில் பேசும்போது ஸ்ரீக்கு குடிக்கும் பழக்கம் கிடையாது ஆனால் அவருக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் தான் இருந்தது. அந்த பழக்கம் மட்டும் அவர் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். இப்போது எல்லோரும் அவர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

இந்த நிலையில் ஸ்ரீ தான் உன் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டேன். என்று கூறியிருக்கிறார். அதோடு இந்த பழக்கத்திற்கு யாரும் அடிமையாகி விடாதீர்கள் இது ஒரு மோசமான விஷயம் என்றும் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதனால் ஸ்ரீ தன்னை பற்றியும் தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளையும் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டார் என்று தெரிகிறது. இதனால் இவர் மீண்டும் விரைவில் பழைய நிலைக்கு மாறி விடுவார். அவர் பழையபடி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை இனி விரைவில் நிறைவேறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+