கருப்பசாமி மேல நம்பிக்கை இல்ல.. அதனால இனி அப்படி நடிக்க மாட்டேன்.. நடிகர் ஸ்ரீ குமார் ஆதங்கம்
சென்னை: சமீப காலமாக திரைப்படங்களில் மட்டுமல்ல சீரியல்களிலும் கருப்பசாமியை பயன்படுத்தி வருகிறார்கள். கோவில் காட்சிகள் என்றால் உடனே ஒருவர் கருப்பசாமி அருள் வந்து ஆடுவது போலவே காட்சிகள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்று சீரியல்களில் அதிகமாக கருப்பசாமி வேடம் போட்ட நடிகர் ஸ்ரீகுமார் இனி நான் கருப்பசாமி வேடம் போட மாட்டேன், ஏனென்றால் எனக்கு அந்த சாமி மீது நம்பிக்கை கிடையாது.. நான் இயேசுவை நம்புறேன் என்று பேசி இருக்கும் நிலையில் இது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ஸ்ரீகுமாருக்கு சின்னத்திரையில் அறிமுகமே தேவையில்லை. பல வருடங்களாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவியும் நடிகை தான். பாண்டவர் பூமி திரைப்படத்தில் தோழா தோழா என்ற பாடலுக்கு வருவாரே ஷமிதா அவர்தான் இவருடைய மனைவி. இப்போதும் அவர் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் ஸ்ரீகுமார் மனைவி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சாமந்தி சீரியலில் வில்லி கேரக்டரில் ஷமிதா நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஸ்ரீகுமார் சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த சமயத்தில் ஜீ தமிழில் கெட்டிமேளம் சீரியலிலும் நடித்து வந்தார். இப்போது அந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டது.

நடிகர் ஸ்ரீகுமார் விளக்கம்
இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, இனி நான் கருப்பு (கருப்புசாமி) கெட்டப்புல நடிக்க மாட்டேன். சின்னத்திறையிலேய அதிக கருப்பு கெட்டப் போட்டது நானாகத்தான் இருப்பேன். அதை அதிக முறை பண்ணிட்டோம்னு தோணுது. அதே மாதிரி எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை ஏன் மிகைப்படுத்தணும்னு தோணுது. எனக்கு இயேசுவை பிடிக்கும். இயேசுவை நம்புகிறேன்னு ஓபனா சொல்லுவேன்.
கருப்பு மீது நம்பிக்கை இல்லை
மத்தவங்க நம்பிக்கையில் நான் தலையிடல. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை நான் ஏன் மிகை படுத்தனும்னு எனக்கு தோணுது. அதனால இனி கருப்பாக நடிக்க மாட்டேன் என்று ஸ்ரீகுமார் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கருப்பு வேடத்தில் நடிக்கும்போது கூட விமர்சனங்கள் வந்தது. இவர் இயேசுவை நம்புகிறவர் அப்படி இருக்கும்போது எதற்காக அவர் கருப்புசாமி வேட்டத்தில் நடிக்க வேண்டும் என்று சிலர் கேட்டபோது நடிகன் என்று வந்துவிட்டால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் எனக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது இரண்டாம் பட்சம் தான் அந்த கேரக்டரை இயக்குனர் விரும்புகிறார் என்றால் அதில் 100% என்னுடைய நடிப்பை கொடுப்பதுதான் என்னுடைய வேலை என்று சொல்லி இருந்தார்.

திடீர் மாற்றம்
ஆனால் இப்போது இவருடைய மாற்றம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இவருக்கு எந்த சீரியல்களும் கைவசம் இல்லை என்பதால் இதுபோல பேசுகிறாரா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் ஒரு சிலரோ நடிகன் என்று வந்து விட்ட பிறகு அந்த கேரக்டர் பண்ண மாட்டேன், இந்த கேரக்டர் பண்ண மாட்டேன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
விடாத கருப்பு
வானத்தைப்போல சீரியலில் இவர் கருப்பு வேஷம் போட்டதற்கு அளவே கிடையாது. எத்தனை முறை இவர் கருப்பசாமியாக வந்தார் என்று சொல்ல முடியாத அளவிற்கு இவருடைய ஆட்டம் அந்த சீரியலில் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை இவருக்கு கருப்பசாமி வந்துவிடும் அப்படித்தான் அந்த சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய நடிப்பை பார்த்து கெட்டிமேளம் சீரியலிலும் அதே கேரக்டரை அவருக்கு கொடுத்து விட்டனர். அதனாலேயே இப்போது அவருக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கும் போல.
அடுத்த சீரியலில் கமிட்டாகுறதுக்கு முன்னாடியே இதை சொல்லி வைப்போம் என்று அவரும் ஒரு அறிக்கையை சொல்லிவிட்டார். ஆனால் இந்த முடிவு அவருக்கு சாதகமாகுமா? பாதகமாகிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
