நடிகர் ஸ்ரீ வாழ்க்கையில் நடந்தது இதுதான்..! அந்த வேலை கேட்டு போன் பண்ணுனார்.. பிரபலம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ பற்றி அவருடைய தோழி டோட்டி டேவிட் என்பவர் பேசிய பேட்டி தான் இப்போது இணையத்தில் பலரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது. அதில் ஸ்ரீயின் தற்போதைய மாற்றத்திற்கு என்ன காரணம், அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

கடந்த வாரத்தில் நடிகர் ஸ்ரீ சோசியல் மீடியா பக்கங்களை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இதுகுறித்து நேரடியாக விளக்கம் கேட்பதற்காக முயற்சி செய்தோம். ஆனால் அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதனால் ஸ்ரீ குறித்து முதல் செய்தியை ஒன் இந்தியா தமிழில் கொடுத்திருந்தோம். அதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஸ்ரீயின் புகைப்படங்களும் அவர் பற்றிய கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் பரவ தொடங்கி விட்டது.

Vijay TV actor Shri

அதிகரித்த பாலோவர்ஸ்

கடந்த வாரத்தில் ஸ்ரீயின் சோசியல் மீடியா பக்கத்தில் அவரை நாம் பார்த்த போது வெறும் 88 பாலோவர்ஸ் மட்டுமே இருந்தனர். அதைத் தொடர்ந்து நம்முடைய செய்தி வெளியான பிறகு இப்போது அவருடைய பாலோவர்ஸ் 36.8kவாக இருக்கிறது. அதே நேரத்தில் கனா காணும் காலங்கள் சீரியலில் ஸ்ரீயை பார்த்து ரசித்த 90ஸ் கிட்ஸ்கள் அதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவருடைய சில திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தோழியின் பேட்டி

ஆனால் இப்போது அவருடைய நிலைமை பார்ப்பதற்கே பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீ பற்றி அவருடைய தோழி பேசுகையில் ஸ்ரீ என்னுடைய நீண்ட நாள் நண்பர் அவர் நடிகராக வருவதற்க்கு முன்பு மிமிக்ரி ஆர்டிஸ்டாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மிமிக்ரி திறமை

சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட சீசனில் ஸ்ரீயும் கலந்து கொண்டார். அப்பவே அவர் மிமிக்ரி அழகாக பண்ணுவார். ரொம்பவும் திறமையான நபர் அவர் இருந்த இடம் கலகலப்பாக இருக்கும். அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த பிறகு ஸ்ரீ கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தான். முதல்ல எல்லாரும் சேர்ந்து வெளிய போவோம், வருவோம். ஆனால் அதற்குப் பிறகு அவன் எங்களுடன் வருவதையே நிறுத்திட்டான்.

மன மாற்றம்

சரி இப்போ நடிகரா மாறிட்டான் அதனால நம்ம கூட வரலைன்னு நாங்க நினைச்சோம் ஆனா எப்பவாவது வீட்டுக்கு வருவான், அதனால் நாங்க அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். அவன் எங்கு கூட பேசலானதும் நாங்க அவனிடம் கோபப்பட மாட்டோம். பிக் பாஸில் கலந்து கொண்ட போது மைண்ட் லெவல் ஒரு மாதிரியா இருக்குன்னு சொல்லி வெளியே வந்துட்டான். அதற்குப் பிறகு அவனிடம் எங்களால் காண்டாக்ட் பண்ண முடியல.

Vijay TV actor Shri

மன அழுத்தம்

அவன் டிப்ரசனுக்கு மருந்து சாப்பிடுவதாக தோழி எனக்கு சொன்னாங்க. அது கொஞ்சம் அதிகமான டிப்ரஷன் அது மெண்டலியா அவனை பாதிச்சது. அவன் நடிச்சதில் ஒவ்வொரு படவுமே பேசக்கூடிய படம் தான். அதிலும் வழக்கு எண் 18 படத்துல அருமையான நடிச்சிருப்பான். அவன் டைரக்டராக தான் விரும்பினான். மாநகரம் படத்துக்கு அப்புறம் அவர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுனான்.

அரைகுறை வீடியோஸ்

ஆனா இங்கே என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு எங்களுக்கு போன் பண்ணி வேலை வாங்கி கொடுன்னு கேட்டான் அதுவும் புக் அவருக்கு டிசைன் பண்ற மாதிரி வேலைன்னு கேட்டான். அவனுக்கு நாம அட்வைஸ் பண்ணுனா காணாம போயிடுவான். ஒரு கட்டத்துல பொங்கல் கிண்டுன ஸ்ரீயை யாரும் கண்டுக்கல. இன்னைக்கு ஸ்ரீ சோசியல் மீடியாவில் சட்டையை கழட்டி ஆபாசமாக போஸ்ட் போட்டு இருக்கான்னு மட்டும் காட்டுறாங்க.

தோழியின் வருத்தம்

நம்ம அக்லி ஆனதை தான் பாக்குறோமே. அவனா ஆரம்பத்திலேயே ப்ரோமோட் பண்ணி இருக்கலாம். இன்னைக்கு அவன் நல்ல ஆக்டர் என்று சொல்றோம். அவன் போட்ட போஸ்ட்க்கு வேல்யு இல்லாமல் இருந்திருக்கு. மாநகரம் படத்தில் நடிச்ச நடிகர் இப்போ பொங்கல் கிண்டுறாருன்னு அப்பவே மிஸ்கினையும் லோகேஷையும் காப்பாத்துங்கன்னு கேட்டிருக்கலாமே? இன்னைக்கி அவன் நிலைமை மோசமான பிறகு பலருக்கு மனிதாபிமானம் வருகிறது என்று அந்த பேட்டியில் ஸ்ரீ தோழி பேசி இருக்கிறார்.

Vijay TV actor Shri

வெளியே தெரியாத நிலைமை

ஸ்ரீ கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே அறையில் இருந்தபடியே சமையல் செய்வதையும், தான் பாட்டு பாடி ரிலீஸ்களையும் போட்டுக் கொண்டிருந்தார். அதை யாரும் கண்டு கொள்ளவில்லை இப்போது ஸ்ரீ ஆபாசமாக வீடியோ போட தொடங்கியதும் எல்லோரும் அவர் குறித்து ஃபீல் பண்ணி வருகிறார்கள் என்று ஸ்ரீயின் தோழி கோபப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு அதிகமான ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+