நடிகர் ஸ்ரீக்கு மருத்துவ கண்காணிப்பு.. இப்போது அவர் நிலைமை இதுதான்! லோகேஷ் கனகராஜ் பரபரப்பான அறிக்கை
சென்னை: சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவருடைய தற்போதைய நிலையை பார்த்து பலரும் பல்வேறு வருத்தம் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்று அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீக்கு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நல்ல பிரபலம் கிடைத்தது. அதிலும் அவருடைய முதல் திரைப்படமான வழக்கு எண் 18 திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. அதை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய தடித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி காட்டி இருந்தார்.

உடலில் மாற்றம்
தொடர்ந்து இவர் சினிமாவில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் காணாமல் போயிருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்பட்டார்.
வதந்திகள்
அதோடு அரைகுறை உடையோடு ஆபாச வீடியோக்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதனால் இவருக்கு என்ன ஆச்சு ஏன் இவர் இப்படி மாறிவிட்டார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தது ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி விட்டாரா அதனால் தான் இப்படி எல்லாம் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வதந்திகளை பரப்பி வந்தனர். அதுபோல ஸ்ரீ உடன் நடித்த நடிகர்களும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் ஸ்ரீ இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவரிடம் பேச வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம் ஆனால் அவர் யாரிடமும் பேசாமல் மறைந்து வாழ்ந்து வருகிறார் என்று பேசியிருந்தனர்
ரசிகர்களின் வேண்டுதல்
இதனால் இவர் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பது பலருடைய கருத்தாகவும் ஆசையாகவும் இருந்தது.அதேபோல ஸ்ரீ நடித்த மாநகரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஸ்கின் போன்றோர் இவருக்கு உதவ வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ரீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்திருக்கிறார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025
குடும்பத்தினரின் அறிக்கை
அந்த அறிக்கையில் நடிகர் ஸ்ரீராம் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும் தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் என்பதை அனைத்து நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தெரியப்படுத்துகிறோம். அவர் தனது மீட்பு மற்றும் நல் வாழ்வில் கவனம் செலுத்துவதால் அவரது தனிமை தனி உரிமைக்கான தேவையை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தவறான தகவல்கள்
யூகங்கள் மற்றும் தவறான தகவல்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தலாம். மேலும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிவிப்புகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் ஆன்லைனில் ஆஃப்லைனிலும் கேட்டுக்கொள்கிறோம். அவரது தற்போதைய நிலையின் அடிப்படையில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் அல்லது நேர்காணல்கள் அகற்றவும்.
மன உளைச்சல்
ஸ்ரீ பழைய நிலைக்கு வருவதற்காக கவனம் செலுத்தும் போது அவருடைய தனிப்பட்ட இடத்தை மதிக்க வேண்டிக்கொள்கிறோம். நேர்காணலில் குறிப்பிட்ட நபர்கள் வெளிப்படுத்தும் எந்த கருத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை மற்றும் அதை முற்றிலும் மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு புரிதலுக்கும் நன்றி என்று கூறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications