சினேகாவுக்கு நடந்த ஆக்சிடென்ட்.. காரில் இருந்த நிலை! உடம்பெல்லாம் ரத்தம்.. ஸ்ரீகாந்த் சொன்ன விஷயம்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் "ஏப்ரல் மாதத்தில்" திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சினேகாவிற்கு ஏற்பட்ட அதிர வைத்த விபத்து குறித்து பல தகவல்களை பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதிகமான இளம் ரசிகர்களை கவர்ந்து விட்டார். ஆரம்பமான முதல் திரைப்படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் ஏற்பட்டு விட்டது. அதற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போற்ற பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

திறமைகள் இருந்தாலும் வாய்ப்புகளும் வெற்றியும் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடாது என்பது போலத்தான் ஸ்ரீகாந்த் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. பல திரைப்படங்களுக்கு பல்வேறு கஷ்டங்களை ரிஸ்குகளையும் எடுத்தாலும் கடைசியில் அந்த திரைப்படம் பெரிய அளவில் ஸ்ரீகாந்த்க்கு வெற்றி கொடுக்காமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் நடிகை சினேகாவோடு ஏப்ரல் மாதம் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசி இருக்கிறார். ஏப்ரல் மாதம் திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும். அந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரிட் ஆக இருக்கிறது.

அதிலும் "மனசே மனசே மனசில் பாரம்" பாடல் பள்ளி கல்லூரி நட்பை விட்டு பிரியும் நண்பர்களின் மனதை உருக்கும் பாடல் வரிகளாக இருக்கிறது. அதுபோல "பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை" என்ற பாடல் காதலை சொல்லாமல் தவிக்கும் காதலர்களின் மனக்குமுறல்கள் ஆகவே பிரதிபலிக்கிறது. அது மட்டுமல்லாமல் "கனவுகள் பூக்கும்" பாடல் கூட கல்லூரியின் இனிமையான நாட்களை கண்முன்னே கொண்டு வரும்.
இப்படி பல பாடல்களும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுபோல இந்த திரைப்படமும் அந்த நேரத்தில் அதிகமான வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கும் போது சினேகாவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஸ்ரீகாந்த் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கும் சினேகாவிற்கும் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது.

இரண்டு பேருமே வேறு வேறு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தான் இந்த படத்தில் பாதிக்குப் பிறகு நடித்திருந்தோம். அதிலும் சினேகாவிற்கு ஆக்சிடெண்ட் ஆனதை இப்போது நினைத்தாலும் உடல் எல்லாம் சிலிர்த்து விடுகிறது. அந்த ஒரு நிலைமையில் தான் சினேகா இருந்தார். அவருக்கு விபத்து என்று சொன்னதும் நானும் இயக்குனர், கூட கொஞ்சம் பேர் எல்லோரும் சேர்ந்து அந்த இடத்திற்கு ஓடி போனோம்.
அங்கே கார் ஆக்ஸிடென்டில் சினேகா ரத்த வெள்ளத்தில் இருந்தார். அவருடைய முதுகெலும்பு உடைந்து போயிருக்கும் நிலையில் தான் அவர் இருந்தார். கார் கதவுகளை கூட திறக்க முடியாது. கண்ணாடி எல்லாம் உடைந்து போய்விட்டது. அதை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த ஒரு நிலையில் சினேகா இருந்து மீண்டு அந்த திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். அதுபோல எனக்கும் ஒரு விபத்து ஏற்பட்டதால் நானும் மருத்துவமனையில் இருந்தேன்.

இரண்டு பேஷண்டை வைத்து அந்த இயக்குனர் அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். பாதிக்கு மேலே எல்லாம் நாங்கள் இரண்டு பேரும் நடந்து வருவது போன்றே காட்சிகள் இருக்காது. எங்கள் இருவருடைய உடல் நிலையை கருதி இயக்குனர் காட்சிகளை மாற்றி வைத்துவிட்டார். அதுபோல பாதிக்கு மேலே நாங்கள் இரண்டு பேரின் முகம் கொஞ்சம் வீங்கி விட்டோம். அது ஹாஸ்பிடலில் இருந்து வந்த
எஃபெக்ட் தான் என்று பழைய நினைவுகளை ஸ்ரீகாந்த் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications