லெஜண்ட் சரவணா அன்றே சரியா சொன்னாரே.. யாரந்த ஹீரோயின்? ஸ்ரீகாந்த் செஞ்ச 2 தப்பு இதுதான்: பிரபலம் நச்
சென்னை: அழகு என்ற அளவுகோல் மற்றவர்களின் பார்வையில் இல்லை, அவரவர் அழகு, அவரவர் கையில் உள்ளது. அந்தவகையில், பிறரை மனம்புண்படும்படி பேசாதீர்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் சொல்வது நல்ல அட்வைஸ் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த், தினசரி என்ற படத்தில் நடித்துள்ளார்.. இதன் தயாரிப்பாளர் சில்வியாதான், படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.. இந்த படத்தின் பாடல்களை பார்த்த இணையவாசிகள், ஹீரோயினை கலாய்த்து, கிண்டல் செய்தனர்..

உருவகேலி: ஹீரோயினுக்கு டான்ஸ் ஆட தெரியவில்லை என்றும், தயாரிப்பாளர் என்ற காரணத்தினால் மட்டுமே கதாநாயாகியாக நடித்துள்ளார் என்றெல்லாம் கூறினர். சிலர் அப்பெண்ணை உருவகேலியும் செய்திருந்தனர்.
இதையடுத்து, ஸ்ரீகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "தயவுசெய்து பாகுபாடு பார்ப்பதை நிறுத்துங்கள்.. நம் மனதில் இனவெறி அதிகமாக உள்ளது.. யாரையுமே பாடி ஷேமிங் செய்யாதீர்கள்.. அது மோசமான செயல். அனைவரிடமும் அன்பு குறைந்து கொண்டே வருகிறது. நடிக்கிற திறமை இருந்தா, யாரு வேணாலும் நடிக்கலாம். இது சுதந்திரமான நாடு. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. நடிகையினா இப்படித்தான் இருக்கணும்னு ஏதாவது வரை முறை இருக்கா?" என்றெல்லாம் காட்டமாக கேட்டிருந்தார்.
ஸ்ரீகாந்த்: இந்நிலையில், Kingwoods TV-க்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் ஸ்ரீகாந்த்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.. சேகுவேரா பேசும்போது, "ஸ்ரீகாந்த்துக்கு 2 விஷயங்கள் நெகட்டிவ்வாக அமைந்துவிட்டன. சங்கர் படத்தில் ஜீவா, விஜய், ஸ்ரீகாந்த் என்று 3 பேர் நண்பர்கள் சேர்ந்து நடித்தாலும், ஹீரோ விஜய்தான்.
ஆனால், சிவகார்த்திகேயனுக்கு ஆரம்பத்தில் தனுஷ் வாய்ப்புகளை தந்தாலும், இன்று தனுஷ் அளவுக்கு சிவகார்த்திகேயனும் வந்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால் தனுஷைவிட ஒரு படி மேலேதான் நிற்கிறார். அதுபோல, விஜய்க்கு இணையாகவோ, அல்லது முந்தியோ ஸ்ரீகாந்தால் மேல போக முடியவில்லை.
முரட்டுக்காளை: முரட்டுக்காளை படத்தில் இப்படித்தான் விஜய்காந்தை வில்லனாக்க முயற்சித்தார்கள். ஆனால், வில்லன் கேரக்டர் என்று கேள்விப்பட்டதுமே, படத்திலிருந்து விலகி, வாங்கிய அட்வான்ஸை திருப்பி தந்துட்டாரு. ரஜினிக்கு இணையாக இல்லையென்றாலும், நடிகர் சங்க தலைவர் வரை உயர்ந்து, ரஜினி உள்ளிட்ட அனைவரையுமே வழிநடத்தும் இடத்துக்கு விஜய்காந்த் உயர்ந்தார்.
அந்தவகையில், ஸ்ரீகாந்த்தாலும் விஜய்க்கு இணையாக நடித்திருக்க முடியும்.. ஆனால், திருமணம் செய்து கொண்டதுமே, சினிமா வாய்ப்பு ஓரளவு குறைந்தது.. அத்துடன் சில மோசமான படங்களில் நடித்திருக்க கூடாது..
நெகட்டிவ் கேரக்டர்: சாமி என்ற இயக்குனர் எடுத்திருந்த படத்தில், மச்சினனை, அண்ணி விரட்டி விரட்டி காதலிக்கும் கதையில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கக் கூடாது. இயற்கைக்கு முரணான படங்களில் நடிக்கலாமா? சரியான கதைத்தேர்வு, தயாரிப்பாளர் தேர்வு, இயக்குனர் தேர்வு இதையெல்லாம் செய்ய தவறிவிட்டார். நெகட்டிவ் கேரக்டர்களை செலக்ட் செய்திருக்கக் கூடாது..
தயாரிப்பாளரே ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தில், ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.. அந்த பெண் தயாரிப்பாளரை, கேலி கிண்டல் செய்வதால், ஸ்ரீகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கை நியாயமானது.. யாரையுமே பாடி ஷேமிங் செய்ய கூடாது என்று அவர் சொல்வதில் 100 சதவீதம் உண்மை உள்ளது..
அண்ணாச்சி: இப்படித்தான் சரவணன் அண்ணாச்சியை எல்லாரும் கிண்டல் செய்தார்கள்.. "என்னை கேலி பண்ற நேரத்தில் உங்க பொழப்பை விட்றாதீங்க, போய் பொழப்பை பாருங்கள்" என்று காட்டமாக சொன்னார்.. தன்னுடைய கடை விளம்பரங்கள், படங்களில் அண்ணாச்சி நடித்தது, தன்னம்பிக்கையின் உச்சமாகும்..
எனவே, அழகு என்ற அளவுகோல் மற்றவர்களின் பார்வையில் இல்லை, அவரவர் அழகு, அவரவர் கையில் உள்ளது. அந்தவகையில், பிறரை மனம்புண்படும்படி பேசாதீர்கள் என்று ஸ்ரீகாந்த் சொல்வது நல்ல அட்வைஸ்.. அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியானதாகவே உள்ளது" என்று ஸ்ரீகாந்த்துக்கு சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார் சேகுவேரா.












Click it and Unblock the Notifications