வளையத்துள் வந்த "ஹீரோ".. ஸ்ரீகாந்த்துடன் சிக்க போகும் வாரிசுகள்? ஜிபே செய்யப்பட்ட ரூ.75000: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளம், தெலுங்கு, இந்தி பட உலகில் பல நட்சத்திரங்கள் போதைப்பொருளை பயன்படுத்தி சிக்கி கைதாகியிருந்தாலும், தமிழில் ஒரு நடிகர் மாட்டியிருப்பது, இதுதான் முதல்முறையாகும்.. இது அதிசயமாகவே உள்ளது.. விசாரணை வளையம் பெரிதாகி கொண்டிருப்பதால், பல பிரபலங்களின் வாரிசுகளும் சிக்க வாய்ப்புள்ளது என்று பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "ஸ்ரீகாந்த்துக்கு சமீபகாலமாக மார்க்கெட் பெரிதாக இல்லை.. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் அடிதடி தகராறு நடந்துள்ளது..

Television actor Srikanth srikanth

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் இருவருக்குமே, அந்த பாரில் எதிர்தரப்பினருடன் கைகலப்பு நடந்தது..

மண்டை உடைந்தது

இதில், எதிர்தரப்பு நபரை பாட்டிலால் அடித்து மண்டை உடைத்ததில், அவருக்கு 16 தையல் போடப்பட்டு, சிகிச்சையில் ஆபத்தான நிலைமையில் உள்ளார். இந்த விஷயம் அதிமுகவுக்குள் சலசலப்பை கூட்டியது.. இதையடுத்து, இவர்கள் 2 பேருமே அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.

அப்படி பிரசாத் என்பவரிடம் விசாரித்தபோதுதான், ஸ்ரீகாந்த் பெயர் அடிபட்டது.. காரணம், 2002 காலகட்டத்தில், ஸ்ரீகாந்த்தை வைத்து, பிரசாந்த் ஒரு படம் தயாரித்துள்ளார்.. அந்தவகையில், பிரசாந்த்துக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கனவே நட்பு இருந்துள்ளது..

பரபர வாக்குமூலம்

தற்போது வேறு யாருக்காவது போதைப்பொருள் விற்கப்பட்டதா? என்பது குறித்து பிரசாத்திடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கும்போதுதான், பிரவீன் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்குவதாகவும், அதனை நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு வழங்குவதற்காகவே வாங்குவதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார். .

உடனே போலீசார் பிரவீனை பிடித்து விசாரித்தபோது, நைஜீரியாவை சேர்ந்த நபரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். நுங்கம்பாக்கம் பாரில் நடந்த அடிதடி தகராறை விசாரிக்க போயி, இந்த ஒரு மாதத்துக்குள் இத்தனை விசாரணைகளும் நடந்து முடிந்துள்ளன.. இதையடுத்துதான் போலீசார் ஸ்ரீகாந்த்தை விசாரிக்க முடிவு செய்து, அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

ஜி பே மூலம் 75000

அவரை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய பிறகுதான், போதை மருந்தை பயன்படுத்தியது உறுதியானது.. முதலில் தான் போதை உட்கொள்ளவில்லை என்று ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார்.. ஆனால், 75 ஆயிரம் ரூபாய்க்கு ஜி-பே மூலம் பணம் தந்து, அந்த போதை பொருளை வாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

சின்தெடிக் டிரக்ஸ் என்று இதனை சொல்கிறார்கள்.. இந்த போதை மருந்தை சாப்பிட்டால், 40 நாட்களுக்கு மேல், உடலில் அதன் தாக்கம் இருக்குமாம்.. மற்ற போதையை சாப்பிட்டால், 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே உடம்பில் போதை இதுக்கும், ஆனால் இந்த சின்தெடிக் போதையை சாப்பிட்டால் 40 நாட்களுக்கு இருக்கும்.

பொதுவாக, போதை பொருளை விலைக்கு வாங்கி அதை பயன்படுத்தியிருந்தால், ஸ்ரீகாந்த எளிதாக ஜாமீனில் வெளிவர முடியும்.. ஆனால், வெறும் நுகர்வோராக மட்டுமே இல்லாமல், அதே போதைப்பொருளை வேறு யாருக்காவது நட்பு ரீதியாக விற்றிருந்தால், 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள். எனவே இது தொடர்பான விசாரணை நடக்கிறது.


நடிகர் கிருஷ்ணா

இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவையும் உள்ளேகொண்டு வந்துள்ளார்கள்..
அவரிடமும் விசாரணை நடக்கிறது.. அவரை தொடர்ந்து வேறு சிலரும் சிக்க உள்ளதாக சொல்கிறார்கள்.. இப்போது ஸ்ரீகாந்த் 75 ஆயிரம் தந்து, அந்த போதையை தனக்காக மட்டுமே வாங்கினாரா? அல்லது பார்ட்டி வைப்பதற்காக அல்லது நண்பர்களுக்காக வாங்கினாரா? என்று தெரியவில்லை.

நடிகர் ஸ்ரீகாந்த், ஸ்டார் வேல்யூ இருக்கிற நடிகர்.. அவரை அவ்வளவு சீக்கிரம் கைது செய்துவிட முடியாது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக நடத்தியிருக்கிறார்கள்.. முழு டேட்டாவையும் சேகரித்தபிறகுதான், ஸ்ரீகாந்திடம் போலீசார் சென்றுள்ளனர்..

ஆச்சரியமாக இருக்கிறது

ஸ்ரீகாந்த் எப்படி, இந்த போதை மருந்தையெல்லாம் பயன்படுத்தினார் என்பது ஆச்சரியமாக உள்ளது.. நல்ல நடிகராக இருந்தாலும், சரியான கதைத்தேர்வு இல்லாததால், சினிமா வாய்ப்பை இழந்தார்.. அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை..

சமீபத்தில்கூட இளையராஜா இசையில், தயாரிப்பாளரே ஹீரோயினாக நடித்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.. இதையே ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.. இந்த படத்தில் எல்லாம் ஸ்ரீகாந்த் ஏன் நடிக்க வேண்டும்? ஸ்ரீகாந்த் நிலைமை இப்படி ஆகிவிட்டதே? என்று அக்கறையுடன் கேட்டிருந்தனர்.. பட வாய்ப்பு இல்லாத கொடுமையை போக்க, இப்படியெல்லாம் போதையில் இறங்கிவிட்டாரா? தெரியவில்லை.

ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, இந்தி பட உலகில் பல நட்சத்திரங்கள் போதைப்பொருளை பயன்படுத்தி சிக்கியிருந்தாலும், தமிழில் ஒரு நடிகர் மாட்டியிருப்பது, இதுதான் முதல்முறை.. இது அதிசயமாகவே உள்ளது.. விசாரணை வளையம் பெரிதாகி கொண்டிருப்பதால், பிரபலங்களின் வாரிசுகளும் சிக்குவார்கள் என்கிறார்கள்.

முன்னதாக, ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேசும்போது, நடிகர் ஸ்ரீகிருஷ்ணா பெயரும் அடிபடுகிறது.. ஸ்ரீகிருஷ்ணா பிரபல இயக்குனரின் தம்பி ஆவார்.. இவரது அப்பாவும் பெரிய தயாரிப்பாளர்..பரம்பரையாக சினிமா குடும்பம்..

ஸ்ரீகிருஷ்ணா கோவையில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், ஏழெட்டு மாதங்களிலேயே சண்டை வந்துவிட்டது. பிறகு தம்பதி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். கடந்த 1 மாதத்துக்கு முன்பு, 2வது திருமணம செய்ய போவதாக ஸ்ரீகிருஷ்ணா சொல்லியிருந்தார்.. ஆனால், இப்போது இவரது பெயர் போதை பயன்படுத்தியதாக அடிபட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா பத்திரிகையாளர்களிடமும் சரியாக பேச மாட்டார்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+