லுங்கியோடு நடிகை ஓட்டம்? நடிகர் ஸ்ரீகாந்த் போல அந்த நடிகரும் சிக்குகிறாரா? காஸ்ட்லி பொருள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே, சென்னையில் கொகைன் பயன்படுத்தும் நடிகர்கள் சிக்கி கொள்கிறார்கள் என்றாலே, அடுத்தவர்களையும் சேர்த்து மாட்டிவிட்டுவிடுவார்கள் என்று அர்த்தம்.. அந்தவகையில் நடிகர் ஸ்ரீகாந்த்துடன் சேர்த்து மற்றொரு நடிகர் பெயரும் அடிபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் இனிமேல்தான் விசாரணை மேற்கொள்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

"லுங்கியோடு ஓடிய உல்லாச நடிகை, அடுத்தடுத்து சிக்கப்போகும் நடிகர், நடிகைகள்" என்ற தலைப்பில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "போதை மருந்து பயன்படுத்துவது என்பது சினிமாவிலும், அரசியலிலும் அதிகம்.. சிலசமயம், பிராந்தி, விஸ்கி, ரம், ஜிம் இப்படியான போதைகளையும் சாப்பிடுகிறார்கள்..

Television actor Srikanth srikanth

இவைகளை குடித்துவிட்டு டெஸ்ட் எடுத்தால், ஆல்கஹால் சாப்பிட்டுள்ளதாக மட்டுமே காட்டும்.. ஆனால் இதையும் விபத்து நேரத்தில் அதாவது வாகனம் ஓட்டும்போது குடித்துவிட்டு ஓட்டுவது தவறானது, தண்டனைக்குரிய குற்றமாகும்.

போதை வஸ்துக்கள்

இதில் ஒரு சிலருக்கு எவ்வளவுதான் விஸ்கி, ரம், பிராந்திகளை சாப்பிட்டாலும் போதை ஏறாது.. அதனால்தான், அதிக போதைக்காக, கஞ்சா, கொகைன் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இதில், கொகைன் என்பது, சாப்பிட்டால் வெளியே வாசம் வராது. ஆனால், உள்ளுக்குள் ஒருவிதபோதை இருந்து கொண்டேயிருக்கும். பார்ப்பதற்கும் அவர்கள் போதையில் இருப்பது போல தெரியாது, நார்மலாகவே இருப்பார்கள்.

ஆரம்பத்தில் இதுபோன்ற போதைப்பொருட்கள் தெலுங்கு திரையுலகில்தான் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியிலும் நடிக்கிறார்கள்.. எனவே இந்தி நடிகர்களுக்கு இதுபோன்ற கொகைன், உள்ளிட்ட போதை பொருட்களை சாப்பிடுவது சகஜமாகும்.. இதற்காகவே கப்பலை வாடகைக்கு எடுத்து, அதில் விருந்து வைத்துக்கொள்கிறார்கள். அப்படித்தான் ஷாருக்கான் மகன் சிக்கினார்..

மலையாளம், தெலுங்கு

பிறகு தெலுங்கிலும் சிலர் மாட்டவிருந்தனர்.. ஆனால், கடைசி நேரத்தில் தப்பித்துவிட்டார்கள்.. மலையாளத்திலும் இப்படித்தான்.. நடிகர் டாம் சாக்கோ, உள்ளிட்ட 2 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார்கள்.. கைதாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு போதையை பயன்படுத்தி சிக்கி, பிறகு வெளியில் வந்துவிட்டார்கள்..

இங்கு தமிழில் உள்ளவர்கள் மலையாளத்திலும், மலையாள நடிகர்கள் தமிழிலும் நடிப்பது இயல்பாகும்.. இதில் சிலர் இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. விருந்தாளி போல உள்ளே நுழையும் இந்த போதை மருந்து.. பிறகு மெல்ல மெல்ல அடிமைப்படுத்தி, அப்படியே நிரந்தரமாக நபர்களை போதையில் வீழ்த்திவிடும்.. அதனால் போதையிலிருந்து மீள்வது கடினமாகும்.

விரைவில் கைது

இந்த சம்பவத்தை பொறுத்தவரை, பிரதீப் என்பவர்தான் நுங்கம்பாக்கம் போலீசில் முதன்முதலாக சிக்கினார்.. தனக்கு கானா நாட்டை சேர்ந்த ஜிம் என்ற நபர்தான் கஞ்சாவை தந்ததாக வாக்குமூலம் தந்தார். பிரதீப் போலீஸில் சிக்கியதுமே, ஜிம் எஸ்கேப் ஆகிவிட்டார்.. எப்படியும் நம்முடைய காவல்துறை அவரை கைது செய்துவிடும்.

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கஞ்சா விற்பனை செய்வது முதல் அனைத்தையுமே சொல்லிவிட்டார்.. இதையடுத்து, நேற்று காலையிலேயே போலீசார் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றார்கள்.. அவரது வீட்டில் ரெயிடு நடந்தது.. கொகைன் எதுவும் பிடிபடவில்லை..

13 கிராம் பொருள்

எனினும் ஸ்ரீகாந்த் கொகைன் சாப்பிட்டதுபோல, ஸ்ரீகாந்த்தின் ரியாக்‌ஷனில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்..கொகைன் சாப்பிட்ட பாதிப்பு எப்போதுமே நரம்புகளில்தான் தெரியும்.. அந்தவகையில் ஸ்ரீகாந்த், கொகைன் பயன்படுத்தியதாக மருத்துவ சோதனையில் உறுதியானது.. இதையடுத்து, ஸ்ரீகாந்த் கைதானார்..

இப்போது பிரதீப்பிடமிருந்து 13 கிராம் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. வெறும் 13 கிராம் என்று நினைக்கக்கூடாது.. அதன் விலை பல்லாயிரம் ரூபாயாகும். ஒரு கிராம் விலையே காஸ்ட்லி என்பார்கள்..

எப்போதுமே, சென்னையில் கொகைன் பயன்படுத்தும் நடிகர்கள் சிக்கி கொள்கிறார்கள் என்றாலே, அடுத்தவர்களையும் சேர்த்து மாட்டிவிட்டுவிடுவார்கள்.. அந்தவகையில் மற்றொரு தமிழ் நடிகர் பெயரும் அடிபட்டுள்ளது.

இப்போது மலையாள உலகில் இந்த போதைப்பிரச்சனை பெரிய தலைவலியை உண்டுபண்ணி வருகிறது. இதனால் திடீரென மலையாள தயாரிப்பாளர்கள்..

புதிய தீர்மானம்

நேற்றுமுன்தினம் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்கிறபோதே, போதை பொருளை பயன்படுத்திவிட்டு, ஷூட்டிங் வரமாட்டோம் என்று ஒப்புதல் பத்திரம் தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய மலையாள தயாரிப்பாளர் சங்கம், அந்த தீர்மானத்தை நடிகர் சங்கத்துக்கு தந்துள்ளது.. இனி இதை நடிகர் சங்கம் பேசி முடிவெடுக்கும்..

தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாய்களை கொட்டி படம் எடுப்பதால், நம்முடைய தமிழ், நடிகர், நடிகைகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுவரை அப்படியான புகார்களை நம்முடைய தயாரிப்பாளர்கள் சொன்னதுமில்லை, நடிகர், நடிகைகளும் அப்படி நடந்து கொண்டதுமில்லை. அந்தவகையில், நம்முடைய தமிழ் சினிமா எவ்வளவோ மேல்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+