ரிசார்ட் பார்ட்டிக்கு இவரும் போனாரா? பண்ணை வீட்டில் தள்ளாடிய நடிகை? அந்த பவுடர் இத்தனை பயங்கரமானதா
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைதாகி புழலில் உள்ளார்.. பிரசாந்த் என்பவர் மூலம் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் பெற்றிருந்தாலும், திரைத்துறையினர் நடத்தும் பார்ட்டிகளில் ஸ்ரீகாந்த்தும், பிரசாந்த்தும் பங்கேற்றதாக தெரிகிறது. எனவே, அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார்? என்ற லிஸ்ட்டை போலீஸார் கையில் எடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன. இத்தனை பயங்கரம் என்று சொல்லப்படும் கொக்கைன் என்பது என்ன? இதை உட்கொண்டால் தாக்கம் என்ன? என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.
முன்பெல்லாம் பார்ட்டி என்றால் பொதுவெளியில் அப்பட்டமாக நடைபெறும்.. இதுவே சரக்கு பார்ட்டி என்றாலும், ஒரு திரைக்கு பின்னால் நடக்கும்.

ஆனால், சமீபகாலமாக பார்ட்டிகள் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள், பார்களில் நடப்பது இயல்பாகிவிட்டது.. ஆனால், சரக்குகளுக்கு பதிலாக, கொக்கைன், மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருள் வழங்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 போதை பொருளுமே இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான், வெளிநாடுகளிலிருந்து இவைகளை தருவித்து, இங்கு விற்பனை செய்கிறார்கள்.
கோகோ என்ற செடியிலிருந்து தயாராவதுதான் கொக்கைன்.. இந்த செடி அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அதிகமாக விளைகின்றன.. இப்போதும் இந்த இரு நாடுகளிலிருந்தும்தான் கடத்தி வரப்படுகின்றன.
கடத்தல் விற்பனை அதிகம்
இந்த இலைகளை காயவைத்து, பவுடராக்கி பேக்கிங் சோடா கலந்து, மயக்க மருந்தாக அன்றைய காலத்தில் ஆப்பிரிக்கா பழங்குடியினர் பயன்படுத்தினார்களாம். இதற்கு பிறகுதான் இதை போதைப்பொருளாக இதை பயன்படுத்த துவங்கவும், தடை விதிக்கப்பட்டுவிட்டன.
தடைகள் விதிக்கப்பட்டதால், கடத்தல்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலிருந்து சுற்றுலா, கல்வி கற்க இந்தியா வருபவர்கள், இந்த கொகைன் பவுடரை விற்பனை செய்கிறார்கள்.. விலை உயர்ந்தது என்பதால், வசதி படைத்தவர்கள் மட்டுமே இதனை வாங்க முடிகிறது.
கொகைன் பயங்கரம்
கொகைன் பவுடரை மூக்கு வழியாக உறியலாம், பல் ஈறுகளுக்கு இடையில் வைக்கலாம், ஒரு சில்வர் பேப்பரில் வைத்து எரித்து, அந்த புகையை நுகரலாம்.. அல்லது நீரில் பவுடரை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தலாம்.
ஆனால், எப்படி உட்கொண்டாலும், கொகைன் எடுத்து கொள்பவர்களுக்கு பசி இருக்காது, ஜூஸ் போன்ற திரவ உணவுகளையே சாப்பிட முடியுமாம். களைப்பு, தூக்கம் இருக்காது.. ஆனால் அதிக போதையை தரும்.. இதேபோன்ற போதையை தரக்கூடியது மெத்தாம்பெட்மின்.. இவை இரண்டுமே உட்கொண்டால், போதையில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாதாம்.
நடிகர்கள், நடிகைகள்
நீண்டநேர பாலியல் இன்பத்துக்காகவும், இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்களும் உண்டு என்கிறார்கள்.. பாலிவுட்டில் மட்டுமே புழங்கி கொண்டிருந்த இந்த போதைப்பொருள் தமிழகத்துக்குள்ளும் வந்துள்ளது.. நடிகைகள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன. தற்போது ஸ்ரீகாந்த் கைதாகி உள்ள நிலையில், இனி பல பிரபலங்களும் கைதாகலாம் என்கிறார்கள்.
சின்தெட்டிக் டிரக்ஸ்
நேற்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "இதுபோன்ற போதைப்பொருளை சின்தெடிக் டிரக்ஸ் என்கிறார்கள்.. இந்த போதை மருந்தை சாப்பிட்டால், 40 நாட்களுக்கு மேல், உடலில் அதன் தாக்கம் இருக்குமாம்.. மற்ற போதையை சாப்பிட்டால், 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே உடம்பில் போதை இதுக்கும், ஆனால் இந்த சின்தெடிக் போதையை சாப்பிட்டால் 40 நாட்களுக்கு இருக்கும்.
பொதுவாக, போதை பொருளை விலைக்கு வாங்கி அதை பயன்படுத்தியிருந்தால், ஸ்ரீகாந்த் எளிதாக ஜாமீனில் வெளிவர முடியும்.. ஆனால், வெறும் நுகர்வோராக மட்டுமே இல்லாமல், அதே போதைப்பொருளை வேறு யாருக்காவது நட்பு ரீதியாக விற்றிருந்தால், 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
2 நடிகைகள்
ஸ்ரீகாந்த் தன்னுடன் கொக்கைன் பயன்படுத்தியதாக 2 பிரபல நடிகைகள் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறாராம்.. அதில் ஒரு நடிகை தற்போது வெளியான ஒரு படத்தில் 2 முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறாராம்.. இன்னொரு நடிகை சூரத்தை சேர்ந்தவராம். ஏற்னவே ரிசார்ட்டில் கலந்து கொண்ட பார்ட்டிக்கு சென்றவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை போலீசார் எடுத்துவரும்நிலையில், திரைத்துறையில் மேலும் சிலரிடம் விசாரணை நீளும் என எதிர்பார்க்கப்படுவதால், பரபரப்பு நீள்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications