நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு என்ன நேரமோ! 3 முறை போராடியும் தோல்வி! கடைசி வரை நிறைவேறாத ஆசை!
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணியின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.

இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் இயக்குநராக முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் நடிகராகிவிட்டார். காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினிமுருகன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பரமன் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்பட்டு வந்தார்.
இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அது 4ஆவது கட்டம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுப்பிரமணியின் குடும்பமே அதிர்ந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் புற்றுநோய் சிகிச்சைக்கு பண உதவி செய்ய வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சுப்பிரமணி, கமாண்டோவின் லவ் ஸ்டோரி எனும் படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார்.
பிறகு வீட்டில் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய மூளை, உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு புற்றுநோய் பரவியது.
இதனால் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாத சூழலில் அவர் நேற்று மாலை இறந்துவிட்டார். சுப்பிரமணிக்கு மனைவி உள்ளார். 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. நேற்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடந்தது. இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை திரைத்துறையினரோ நடிகர் சங்கமோ செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சுப்பிரமணியின் கடைசி வரை ஒரு ஆசை நிறைவேறாததை எண்ணி அவருடைய குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். சூப்பர் குட் சுப்பிரமணிக்கு இயக்குநராக வேண்டும் என்பது ஆசையாம். இதற்காக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிகர் ராஜசேகரை வைத்து பிரம்மாண்டமாக படம் இயக்கத் தொடங்கினாராம்.
ஆனால் ஆரம்பித்த சில நாட்களிலேயே அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து நடிகர் பார்த்திபனை வைத்து ஒரு படம் இயக்கினார். ஆனால் அதுவும் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதையடுத்து தியாகராஜனை வைத்து 3 படங்கள் இயக்க ஒப்பந்தம் போட்டிருந்தாராம். ஆனால் அதிலும் பிரச்சினையானதால் அந்த படமும் தொடங்கப்படவில்லையாம். இப்படி தொடர்ந்து 3 முயற்சிகளிலும் அவர் தோல்வி அடைந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவருடைய இயக்குநர் ஆசை என்பதை கடைசி வரை நிராசையாகவே போய்விட்டது என குடும்பத்தினர் கண்ணீர் விடுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications