எனக்காக மட்டும் இல்ல.. கார்த்தியின் படிப்புக்காக ராதிகா செய்த செயல்! நடிகர் சூர்யா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் நடைபெற்ற விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசிய பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதில் நடிகை ராதிகா செய்த உதவியை அவர் நன்றியுடன் பெருமையாக பேசிய சம்பவம் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சூர்யா மற்றும் ஜோதிகா கல்யாணத்திற்கு காரணமே இந்த பொண்ணுதான் என்று ஒரு மேடையில் ராதிகாவை பற்றி சிவகுமார் பேசியிருப்பார். இந்த பொண்ணுதான் என்னுடைய மனசை மாத்திடுச்சு. அவங்க 2 பேரும் காதலிக்கிற விஷயம் தெரிந்ததும் என்கிட்ட வந்து சொல்லி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று சொல்லி இருந்தார்.

சிவகுமார் சொன்ன விஷயம்

ஆரம்பத்தில் இருந்து ராதிகாவும் சிவகுமாரும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சில திரைப்படத்தில் இருவரும் அண்ணன் தங்கச்சிக்காக நடித்திருக்கிறார்கள். அதுபோல சீரியலில் கூட இவர்கள் இருவரும் அண்ணன் தங்கச்சியாக நடித்திருக்கிறார்கள். அதனால் ராதிகா குடும்பத்திற்கும் சிவகுமார் குடும்பத்திற்கும் பல வருடங்களாகவே பழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா மேடையில் பேசும்போது, தனது ஆரம்ப கால சினிமா பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர் என்று பெருமையாக பேசினார்.

Suriya Radhika Karthi

நடிகர் சூர்யா பேட்டி

மேலும் நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் எல்லாம் எனக்கு ராதிகா மேடம் வந்து நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். அப்படி சில படங்களில் எனக்கு அவங்க சம்பளமும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருந்தார். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க முடியாது. அது மட்டும் அல்லாமல் என்னுடைய தம்பி கார்த்தி அமெரிக்காவில் படிக்க ஆசைப்பட்டார்.

ராதிகாவின் பெருந்தன்மை

அப்போது அமெரிக்கா போக வேண்டும் என்றால் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் இருக்க வேண்டும் என்று ரூல்ஸ் இருந்தது. அந்த நேரத்தில் தேவையான பணத்தை கொடுத்து உதவியவர் ராதிகா தான். இந்த பணம் முழுக்க உங்க அக்கவுண்டில் இருக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று அவர் சொன்ன ஒரு வார்த்தை எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது என்று சூர்யா பேசியிருக்கிறார்.

நடிகர் சூர்யா குடும்பத்திற்கு வந்த
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். இந்த நிலையில் சூர்யா ராதிகா பற்றி பேசியதை பலரும் பாராட்டி வருகின்றனர். பல வருஷத்துக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் நடந்த விஷயங்களை இத்தனை வருடங்கள் கழித்து வெளிப்படையாக சொல்லி இருப்பது சூர்யாவின் பணிவு என்று அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

அதே நேரத்தில் ராதிகாவும் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பல பிரபலங்களின் வீட்டிலும் முக்கிய நபராக இருப்பது தெரிய வருகிறது. சமீபத்தில் கூட பாரதிராஜாவின் இறுதி சடங்கில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் முன்னாடி நின்று அனைத்து வேலைகளையும் பார்த்து வந்தார். அதேபோல இயக்குனர் பாக்யராஜ் இறப்பிலும் முன் நின்றார். இதற்கு சிலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால் இன்னும் சிலர் அவருடைய பழக்கம் குடும்பத்தினரிடம் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் தைரியமாக இவ்வளவு செய்கிறார் என்று அப்போதே அவருக்கு சப்போர்ட் செய்தனர். இப்போது சூர்யா ராதிகா பற்றி பேசியதை ராதிகாவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+