ஜோதிகா இதுபோல மசூதியில் பேசுவாரா? சூர்யா பொங்குவாரே? மாணவி பற்றி ரஜினி, கமல் வாய் திறக்கலயே: பிரபலம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், சில முக்கிய நடிகர்கள் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார். குறிப்பாக, சூர்யா, ஜோதிகா இருவரும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்றும் ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்துள்ள பேட்டியில், "எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நடிகர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை. தங்களது நடிப்பு குறித்தோ அல்லது படத்தை பற்றியோ அவர்கள் பேசலாம். ஆனால், இதையும் தாண்டி சில நடிகர்கள், எந்த சம்பவம் நடந்தாலும், ஒரு பொது கருத்தை முன்வைக்கிறார்கள்.

பாரபட்சம்: யாராக இருந்தாலும்சரி, எந்த தொழிலில் இருப்பவர்களாக இருந்தாலும்சரி, கருத்துரிமை, பேச்சுரிமை தேவைதான். ஆனால், பாரபட்சமின்றி அவர்களது கருத்துக்கள் இருக்க வேண்டும். சினிமா என்ற வெளிச்சம் தங்கள் மீது இருப்பதாலே, தங்களை தத்துவ ஞானியாக, தங்களை அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு, பாரபட்சத்துடன் சிலர் கருத்து சொல்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்களை தாக்கி பேசினாலும்கூட, அதை வன்மத்துடன் எதிர்த்து பேசுவதாக இருக்கக்கூடாது.
அதிமுக ஆட்சியில் ஒரு பாலியல் குற்ற சம்பவம் நடந்து, அதற்கு எதிராக குரல் நடிகர் யாராவது குரல் எழுப்புகிறார் என்றால், அதே பாலியல் சம்பவம் திமுக ஆட்சியில் நடக்கும்போதும் எதிர்த்து குரல் எழுப்பணும்.. மாறாக அதை கடந்து செல்லக்கூடாது. அதேபோல அதிமுக ஆட்சியின்போது நடந்த குற்ற சம்பவத்துக்கு அமைதியாக இருந்துவிட்டு, திமுக ஆட்சியில் நடக்கும்போது மட்டும் குறை சொல்வது, பாரபட்சமானது.
மருத்துவமனை: "கோயிலுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறீர்கள். அதை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்" என்று அன்று ஜோதிகா சொன்னது வெளிப்பார்வைக்கு சரியாக இருக்கும்.. ஆனால், இதே கருத்தை தேவாலயத்திலோ, மசூதியிலோ அவரால் சொல்ல முடியாது.. இதைத்தான் பார்ஷியாலிட்டி என்கிறோம்.
சினிமா வெளிச்சத்தில் உள்ள நபர், எது பேசினாலும் அது விமர்சனத்துக்குள்ளாகிவிடும். அப்படியிருக்கும்போது அனைவருக்கும் பொதுவான கருத்தைதானே சொல்ல வேண்டும்?
கமல் விமர்சனம்: கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையிலும் உள்ளார்.. ஏன் அவர் எதை பற்றியும் பேசுவதில்லை? வாய் திறப்பதில்லை? ஏதாவது கருத்து சொல்லிவிட்டால், அவர்கள் திமுகவுக்கு எதிரானவர் என்ற பார்வையே இங்கு தவறானது.
எப்போதுமே ஒரு அநீதி என்றால் சூர்யா பொங்கி எழுவார்.. ஆனால் தன்னுடைய அடுத்த படத்துக்கு தடங்கல் வரக்கூடாது, தொழில் ரீதியான நெருக்கடி உள்ளது என்று அமைதி காக்கிறாரா தெரியவில்லை. தொழிலுக்காக அமைதியாக கடந்து போனால், இதன்பெயர் பார்ஷியல்.
ஜோதிகா: ஜோதிகாவும், சூர்யாவும் சம்மன் இல்லாமல் அன்று ஆஜரானார்கள்.. ஆனால் இப்ப ஏன் ஆஜராகவில்லை? "மிக்சர் சாப்பிடறாரா?" என்று அன்று கேட்டது சூர்யாதானே? இதுபோன்ற பாலியல் சம்பவத்தை பிரபலங்கள் கண்டித்து பேசுவது, கிரிமினல்களுக்குதான் எச்சரிக்கையாக இருக்குமே தவிர, அரசுக்கு எதிராக அமைந்துவிடாது. ஆனால், சூர்யா, ஜோதிகா, ரஜினி, கமல் என அனைவருமே அமைதியாக உள்ளார்கள். அட்லீஸ்ட் "குற்றவாளிக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும்" என்றாவது சொல்லலாமே?
ஒருவேளை "கங்குவா" உள்ளிட்ட விவகாரங்களில் அதிகமாக பேசி, சர்ச்சையாகிவிட்டதால், ஜோதிகா, உள்ளிட்டோர் அமைதியாக இருக்கலாம். ஆனால் வாய்மூடி மவுனமாக இருப்பது திமுக அரசுக்கு சாதகமாக இருக்கிறது என்பதையும் தாண்டி, ஒரு சமுதாய கருத்தை தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டும். அல்லது எந்தவொரு பிரச்சனை குறித்துமே பேசக்கூடாது. தங்கள் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் சேகுவேரா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications