கொழுந்தனார், மாமனார் வீட்டை உதறிய ஜோதிகா? அதுவிடுங்க, பிரபல வில்லன் நடிகர் திடீர் அறிவிப்பு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா இந்திப்பட வாய்ப்புக்காக மும்பையில் குடியேறியிருக்கிறார் என்றால், மற்றொரு பிரபல நடிகர், மும்பையிலிருந்து வெளியேற போவதாக அறிவித்துள்ளாராம். இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

AG Modern Media சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "இந்தி படங்களின் வாய்ப்பை பெறுவதற்காக சூர்யா மும்பைக்கு குடியேறினார். ஆனால் ஜோதிகா, "மும்பையில்தான் மிகச்சிறந்த பள்ளிகள் உள்ளன.. என்னுடைய பிள்ளைகள் படிப்பதற்காக, மும்பை வந்துள்ளேன்.

television jyothika surya

அதுமட்டுமல்லாமல், என்னுடைய பெற்றோர் தனியாக இருக்கிறார்கள்.. அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை. மகள் என்ற முறையில் அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால்தான் மும்பை வந்தேன் என்று கூறியிருந்தார்.

கொழுந்தனார்: ஜோதிகா இப்படி சொல்வது ஒருபுறமிருந்தாலும், தன்னுடைய மாமனார், மாமியார், கொழுந்தனார், கொழுந்தனார் மனைவியை பார்க்க விருப்பமில்லையா? சென்னைக்கு வந்தாலும்கூட, சிவக்குமார் வீட்டுக்கு வருவதில்லையே ஏன்?

கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்பதே சிவக்குமாரின் விருப்பம். இதற்காகவே தி.நகரில் பங்களா ஒன்று கட்டினார். ஆனால், எந்த நோக்கத்திற்காக அந்த பிரம்மாண்ட பங்களாவை கட்டினாரோ, அந்த நோக்கம் கடைசிவரை நிறைவேறவேயில்லை.

சூர்யா மும்பையில் குடியேறியிருக்கிறார் என்றால், பிரபல வில்லன் நடிகர் மும்பையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.. அனுராக் காஷ்யப் பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர். சமீபத்தில் வெளியாகியிருந்த "மகாராஜா" படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த டைரக்டரும்கூட.. இந்தியில் பல வெற்றி படங்களை இயக்கியவர்.

பத்திரிகையாளர்கள்: இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து, "இந்தியாவின் சினிமா சிட்டி என்று அழைக்கப்படும் மும்பை இப்போது சீரழிந்துவிட்டது. ஸ்டார்களை உருவாக்குவதற்காக பல ஏஜென்சிகள் இங்கே செயல்படுகின்றன.

எத்தனையோ கோடீஸ்வரர்கள் தங்கள் மகன்களை, மகள்களை இந்தியில் ஹீரோ, ஹீரோயினாக்குவதற்காக துடித்து கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகிறார்கள். இதனால் திறமையான பல கலைஞர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. நல்ல நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. இங்கே வருகிற தென்னிந்திய இயக்குனர்கள் எல்லாருமே கமர்ஷியல் டைரக்டர்களாக உள்ளனர்.

மலையாள படம்: ரூ.500 கோடி, 1000 கோடி செலவில் பிரம்மாண்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி படம் எடுக்கிறார்களே தவிர, கதையில் கவனம் செலுத்துவதில்லை.

மலையாளத்தில் சிறப்பாக எடுக்கப்பட்ட "மஞ்சுமல் பாய்ஸ்" போன்ற படத்தை இங்கே மும்பையில் எடுப்பார்களா? நல்ல திறமையானவர்களுக்கு இங்கே வாய்ப்பில்லை. அதனால் மும்பையைவிட்டு வெளியேறுகிறேன்" என்று அறிவித்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+