நானும் “நாகர்கோவில்”காரன் தானே! மாரி செல்வராஜ் ஏன் இப்படி பண்ணுறாரு? டெலிபோன் ராஜ் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் காமெடி நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமான டெலிபோன் ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி தனக்கு இருக்கும் வருத்தங்களை பேசி இருக்கிறார். அதாவது மாரி செல்வராஜ் அவருடைய சொந்த ஊர் காரர்களைத்தான் அவருடைய திரைப்படத்தில் அதிகமாக நடிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் நான் எங்களைப் போன்ற நடிகர்களுக்கு வாய்ப்பு தரவில்லையே என்று தன்னுடைய ஆதங்கத்தை அதில் டெலிபோன் ராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் டெலிபோன் ராஜ் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலு உடன் காமெடி கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் வடிவேலுவின் ஊத்தப்பம் காமெடியில் அதிகளவில் பிரபலம் அடைந்து விட்டார். அதிலும் அந்த காமெடியில் வடிவேலு மணி கணக்கில் தனக்கு ஊத்தப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க எல்லாவற்றுக்கும் ஆம்... ஆம் என்றும் தலையாட்டி கொண்டிருக்கும் டெலிபோன்ராஜ் கடைசியில் "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்" என்று ஒரே வார்த்தைகள் முடித்துவிட்டு போய்விடுவார்.

Actor Telephone Raj about Director Mari Selvaraj Interview

இது பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. அதனாலேயே இந்த காமெடியை பலர் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தனர். என்னதான் டெலிபோன் ராஜ்க்கு ஒரு சில காட்சிகள் பெரிய அளவில் வைரல் ஆனாலும் தொடர்ச்சியாக தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.. எங்களுக்கு நடிக்கும் திறமை இருந்தும் சிலர் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று பல பேட்டிகளில் வேதனையோடு பேசி இருக்கிறார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் எனக்கு மாரி செல்வராஜ் மீது சில வருத்தங்கள் உண்டு. ஏன்னா அவருடைய திரைப்படங்களில் அவருடைய ஊர்காரர்களைத்தான் அவர் நடிக்க வைக்கிறார். அதிலும் அவருடைய ஊர்க்காரர்கள் நாங்கள் நடிக்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்களை பிடித்து வைத்து இவர் நடிக்க வைக்கிறார்.

ஆனால் எங்களைப் போன்றோர் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறோம். அதற்கு ஒரு வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார். நான் மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தில் வாய்ப்புக்காக ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அதுபோல பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கூட நான் வாய்ப்புக்காக முயற்சி எடுத்து இருந்தேன். அதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவரது ஊர்காரர்களை மட்டும் அவர் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து பாதுகாக்கிறார்.

Actor Telephone Raj about Director Mari Selvaraj Interview

அது பற்றி கர்ணன் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண் என்னிடமே சொன்னார். கர்ணன் படத்தில் நாங்கள் நடிக்கும் போது எங்களுக்கு அடி விழுந்தது.. ஆனால் அடி விழுகிற காட்சிகளில் எங்களை அடி வாங்க வைத்துவிட்டு அவர் ஊர்காரர்களை பின்னாடி பாதுகாத்து விடுகிறார் என்று சொன்னார். அதுபோல எனக்கும் "நாகர்கோவில்" ஊரு தான்.

அவர் திருநெல்வேலிக்காரர்.. நாங்க ரெண்டு பேருமே பக்கத்து ஊரு காரங்கதான். எனக்கு ஒரு வாய்ப்பு தரலாமே? எனக்கும் அவங்க ஊர்காரர்கள் போல தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கு. எங்க ரெண்டு ஊருக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் பேச்சு வழக்கில் இருக்காது. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று, தன்னுடைய ஆதங்கத்தை தான் நான் சொல்கிறேன்.. அவரை குறையாக சொல்லவில்லை என்று அந்த பேட்டியில் டெலிபோன் ராஜ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+