வடிவேலுவின் பஞ்சாயத்து காமெடி “திடீர் கண்ணையா” ஞாபகம் இருக்கா? இவ்ளோ ஹிட் படத்தில் நடித்திருக்கிறாரா?
சென்னை: நடிகர் கவுண்டமணி, வடிவேலு போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்து பெயர் வாங்கிய திடீர் கண்ணையா குறித்த செய்தி தான் இணையத்தில் பரவி வருகிறது. அதே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்த திடீர் கண்ணையாவின் கடைசி காலம் வலி நிறைந்த வேதனையோடு நகர்ந்து இருந்தது.
ஆனாலும் திடீர் கண்ணையா நடித்த பல காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்படுகிறது. அதிலும் வடிவேலு நடித்த பஞ்சாயத்து காமெடி யாராலும் மறக்க முடியாது அதாவது ஆட்டை திருடிவிட்டு சொல்லு சொல்லித்தான் பாரு என்று வடிவேலு அலம்பல் பண்ணும்போது திடீர் கண்ணையாவின் ரியாக்ஷன் வேற லெவலில் இருக்கும். அது பல நேரங்களில் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளாக வலம் வருகிறது.

இந்த நிலையில் திடீர் கண்ணையா குறித்து மேலும் சில தகவல்களை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் காமெடி ட்ரை பண்ணுனாலும் ஒரு சிலரால்தான் மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விட முடிகிறது. அதிலும் காலம் கடந்த பிறகும் அவர்கள் பேசிய டயலாக் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதில் ஒருவர் தான் திடீர் கண்ணையா. இவருடைய சொந்த ஊர் சென்னை தானாம். சின்ன வயசுலயே சென்னை பெரம்பலூரில் உள்ள ரயில்வே கோச் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பலர் சினிமாவில் வருவதற்கு முன்பு நாடகங்களில் நடித்த பெயர் வாங்கியது போலத்தான் இவரும் நடித்திருந்திருக்கிறார். பிறகு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் மூலமாக தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த திடீர் கண்ணையாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதிலும் அபூர்வ ராகங்கள், பிரியா, பட்டணத்து ராஜாக்கள், வெள்ளை ரோஜா, நீதியின் மறுபக்கம், இரவு பூக்கள், கூட்டுப்புழுக்கள், மனக்கணக்கு, நெத்தியடி, வணக்கம் வாத்தியாரே, வைதேகி கல்யாணம், எல்லைச்சாமி, பொறந்த வீடா புகுந்த வீடா, நல்லதே நடக்கும் என்று 250 க்கும் மேற்பட்ட ஹிட்டான திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதுபோல ஆரம்பத்தில் திடீர் கண்ணையா, கவுண்டமணியின் காமெடி குரூப்பில் நடித்திருக்கிறார். பிறகு இவர் வடிவேலு குழுவில் சேர்ந்து நடிக்க தொடங்கியிருந்தார். இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டது. அதனாலயே மீம்ஸ்களில் டெம்ப்ளேட்டுகளாக சமூக வலைதள பக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீர் கண்ணையா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இனி வரும் காலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதற்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதுபோல இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் திடீர் கண்ணையா ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு ரமேஷ், சித்ரா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் நடிப்பால் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்த திடீர் கண்ணையா கடந்த 2013ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்.

77 வயதில் இறந்த திடீர் கண்ணையா பெரிய அளவில் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டு போயிருக்கிறார். அதே நேரத்தில் இவருக்கு திடீர் கண்ணையா என்று பெயர் வருவதற்கு காரணம் இவர் தன்னுடைய வசனங்களை பேசும் போது திடீரென்று சில வார்த்தைகளை சேர்த்து விடுவாராம். காமெடிக்கு தகுந்த மாதிரி அந்த நேரத்தில் என்ன வார்த்தைகள் தேவைப்படுகிறதோ அதை இவர் திடீரென்று சேர்த்துக் கொள்வதால் தான் இவருக்கு இப்படி ஒரு பெயர் வந்தது என்று கூறப்படுகிறது .












Click it and Unblock the Notifications