கருப்பா இருந்தா கெட்டவனா? குழந்தைகளுக்கு “இதை” சொல்லி கொடுங்க! நடிகர் TSK ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் TSK இப்போது சினிமாவிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதிலும் லப்பர் பந்து திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கருப்பா இருப்பவர்கள் தான் வில்லன்கள் என்கிற மாதிரி சமூகத்தில் இருக்கும் அவல நிலை குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக பேச்சு வழக்கில் சிலர் நீ கருப்பா இருந்தாலும் அழகாய் இருக்கா என்று சொல்வார்கள். இதை கருப்பா இருப்பவர்கள் தங்களுக்கு கிடைத்த பாராட்டாக நினைத்துக் கொண்டாலும் அது ஒரு வஞ்சப்புகழ்ச்சி என்பது போலத்தான் இருக்கிறது. கருப்பா இருப்பது அசிங்கம், ஆனால் அதில் நீ அழகாய் இருக்கிறாய் என்கிற மாதிரி இந்த வார்த்தை இருப்பதாக நடிகர் TSK தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

நிறத்தால் பாகுபாடு
பொதுவாக சினிமாவில் கருப்பாக இருப்பவர் ஒரு சிலர் தான் ஜெயித்திருக்கிறார். விஜயகாந்த், முரளி வரிசையில் ராதிகா, நிரோஷா போன்ற நடிகைகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதிகமான நடிகர்கள் கருப்பாக இருந்தால் வில்லன்கள் என்கிற கேட்டகிரியில் வந்து விடுகிறார்கள். அதுபோல வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று கூட பேச்சுவாக்கில் நம் மத்தியில் பேசப்படுவதை பார்த்து இருப்போம். இதையெல்லாம் பற்றி தான் நடிகர் TSK பேசுகிறார்.
நடிகர் TSK வருத்தம்
அதில் நடிகர் TSK பேசும்போது நம்முடைய பேச்சுவழக்கில் சில விஷயங்கள் எனக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சிலர் என்னிடம் பேசும்போது சார் நீங்க கருப்பா இருந்தாலும் அழகா இருக்கீங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு அப்போ ரொம்ப கோபமாகவும், கஷ்டமாகவும் இருக்கும். அது என்ன இப்படி சொல்லுறாங்க? ஒன்னு நீங்க அழகா இருக்கீங்க, உங்க சிரிப்பு அழகா இருக்கிறது, அல்லது நீங்க நல்லா நடிக்கிறீங்கன்னு பாராட்டுங்க, அது என்ன கருப்பா இருந்தாலும் களையா இருக்கீங்கன்னு சொல்றாங்கன்னு எனக்கு கேட்க தோணும்.
தவறான முன் உதாரணம்
ஆனால் அவங்க கிட்ட எதுவும் பேசாமல் நகர்ந்து விடுவேன். சமீபத்தில் கூட நான் ஒரு ரீல்ஸ் வீடியோ பார்த்தேன். அதில் குழந்தைகள் சிலர் இருக்கிறார்கள் அவர்களிடம் ஐந்து புகைப்படங்களை காட்டி இதில் யார் நல்லவர் என்று கேட்கிறார்கள் அதில் ஒரு நபரை அந்த குழந்தைகள் காட்டுகிறது. இதில் யார் கெட்டவர் என்று கேட்கும் கேட்கும் போது அதில் கருப்பாக இருப்பவரை அடையாளம் காட்டுகிறது. இது தவறான முன்னுதாரணம்.
நடிகர் TSK வேண்டுகோள்
தயவு செய்து உங்கள் குழந்தைகளிடமும் சொல்லிக் கொடுங்கள் கருப்பாக இருப்பவர்கள் கெட்டவர்கள் அல்ல, கருப்பு தான் அழகு என்று சொல்லுங்கள். சிவப்பு நிறம் என்பது ஒரு நிறம் அவ்வளவுதான் ஆனால் சிவப்பு தான் அழகு என்ற ஒரு நிலைமைதான் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது என நடிகர் TSK தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். தங்கதுரை சொல்வது போன்று உங்களுடைய வாழ்க்கையிலும் நிறத்தால் பாகுபாடை உணர்ந்திருக்கிறீர்களா நண்பர்களே?
-
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications