Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீக்கடைக்கு வந்த காமெடி நடிகர் TSR ஸ்ரீனிவாசனை கலாய்த்த ரசிகர்கள்.. கடைசியில் அவர் செய்ததுதான் ஹைலைட்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சூட்டிங்கிற்க்கு வந்து இருந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் டீக்கடைக்கு வந்திருந்த நிலையில் அங்கு இருந்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து சிரிக்க வைத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எங்கள் வீட்டுப்பிள்ளை, கட்டா குஸ்தி, சைரன், சேதுபதி போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் அயலி வெப்சீரிஸில் இவர் நடிப்பை பார்த்து பலரும் இவரை திட்டி தீர்த்து இருந்தனர். ஆனால் அது கூட அவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான். காமெடி நடிகராகவே சினிமாவில் பார்த்து வந்த டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் அயலி வெப்சீரிஸில் முழு வில்லனாக மாறி இருந்தார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் நடிகர் டி.எஸ்.ஆர் ஸ்ரீனிவாசன் நெல்லைக்கு சூட்டிங் வந்திருந்த இடத்தில் திசையன்விளையில் உள்ள ஒரு டீக்கடைக்கு பால் சாப்பிடுவதற்காக வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்ததும் உற்சாகமடைந்து பாட்டு பாடி கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான ராஜ நடை திரைப்படத்தில் இடம் பெற்ற பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலை பாடி கிண்டல் செய்ய அதற்கு மனம் கோணாமல் டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசனும் சிரித்து அந்த இடத்தை கலகலப்பாக மாற்றி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் பெருந்தன்மையை பாராட்டி வருகிறார்கள்.

சினிமாவில் நடிப்பதற்கு அழகு தேவையில்லை என்று பல நடிகர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் டி.எஸ்.ஆர் ஸ்ரீனிவாசன். திறமை இருந்தால் காலம் கடந்தாவது நமக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இவர் இருந்து வருகிறார். இவர் சினிமாவில் ஒரு சில சீன்களில் வந்தாலும் பிரபலமாக இருக்கும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறார்.

அது குறித்து டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி இருந்தார். நான் சினிமாவில் உருவ கேலிக்கு ஆளாகவில்லை. ஆனால் பள்ளிகளில் அதிகமான உருவகேலிக்கு ஆளாகி இருக்கிறேன். என்னுடைய உருவத்தை குறித்து என்னோடு படிக்கும் மாணவர்கள் என்னை கிண்டல் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் நான் நன்றாக படித்து பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.

பள்ளி படிப்பு போதும் சரி, அதற்கு பிறகு சரி நான் அதிகமாக புத்தகங்கள் படிப்பேன். புத்தகங்கள் படிப்பதாலையோ என்னவோ எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இன்று நான் ஓரளவிற்கு வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு 70 படங்களை கடந்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான் 300 ரூபாய் சம்பளத்தில் நடிக்க தொடங்கினேன். அப்போது சின்ன கேரக்டர் கூட எனக்கு கிடையாது. கூட்டத்தில் ஏதாவது ஒரு மூலையில் நிற்பேன். பிறகு தான் எனக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது என்று பேட்டியில் டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+