பாண்டியன் ஸ்டோர்ஸில் செந்திலாக வித்தியாசமாக பண்ணுனேன்! ஆனால், இப்போ.. நடிகர் வெங்கட் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் செந்தில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அதாவது இதற்கு முன்பு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பகுதியில் "ஜீவா" கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதற்கும் இப்போது உள்ள கேரக்டருக்கும் என்ன வித்தியாசம் என்றும் அதில் பகிர்ந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் பலரையும் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. முதல் பாகம் முடிவடைந்ததும் அடுத்த வாரமே இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலர் இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை
ஆனால் இரண்டாவது பாகம் தொடங்கும் போது பல்வேறு விமர்சனங்களும் வந்தது. முதல் பாகத்தில் அண்ணனுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் உள்ள பந்தம் குறித்து இருந்தது. ஆனால் இரண்டாவது பாகத்தில் பாண்டியன் அப்பாவாகவும், அவருடைய மகன்களுக்கும் அவருக்கும் உள்ள பந்தத்தை வைத்து தொடங்கியிருக்கிறது. இதில் முதல் பாகத்தில் ஜீவா கேரக்டரில் நடிகர் வெங்கட் ரங்கநாதன் நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடங்கப்பட்டது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாவது பாகத்தில் ஆரம்பத்தில் வெங்கட் ரங்கநாதன் இல்லை. முதல் பாகத்தில் மீனாவாக நடித்த அதே நடிகை ஹேமா இரண்டாவது பாகத்திலும் மீனாவாக நடித்திருந்தார்.
வெங்கட் ரங்கநாதன் விளக்கம்
அப்போது அவருக்கு ஜோடியாக வெங்கட் ரங்கநாதன் வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வந்தனர். அந்த நேரத்தில் தான் மீனாவுக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகரும் திடீரென சீரியலை விட்டு விலகி இருந்தார். அவருக்கு பதிலாக வெங்கட் ரங்கநாதனை செந்திலாக நடிக்க வைத்திருந்தனர். இந்த நிலையில் ஜீவாவிற்கும் செந்திலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும் அதிகமான ரசிகர்கள் இவ்வாறு இவர் ஜீவா போல சுயநலமா இருக்கிறார் என்று அவரை திட்டி வருகிறார்கள்.
வித்தியாசம் இருக்கு
இந்த நிலையில் தன்னுடைய கேரக்டர் குறித்து வெங்கட் ரங்கநாதன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் "ஹாய் மக்களே ரெண்டு வருஷத்துக்கு பிறகு செந்தில்னு ஒரு டிராக் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ல வருது. ஆனால் நீங்க என்னை முதல் பாகத்தில் வந்த ஜீவாவா மனசுல வச்சுட்டு செந்திலை பார்த்தா கண்டிப்பா உங்களுக்கு செந்தில் பிடிக்காது. ஏனென்றால் செந்தில் கொஞ்சம் லைட்டா செல்ஃபிஸ்டா இருப்பாரு. அவர் ஜீவா போல கிடையாது.

மறக்காத ஜீவா கேரக்டர்
ஆனால் இப்போதும் மக்கள் எனக்கு அன்பை கொடுப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னை பார்க்கும் போது ஜீவா என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த கேரக்டர் எனக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது. என்னால முடிஞ்ச அளவுக்கு செந்தில் கேரக்டரில் கொஞ்சம் டிஃபரண்டா பெர்பாம் பண்ண ட்ரை பண்ணி இருக்கிறேன். அதனால எல்லாரும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications