வெண்ணிற ஆடை மூர்த்தியின் பேரன் மனஸ் மானு சினிமாவில் அறிமுகம் – கீர்த்தி சுரேஷ், பி. சுசிலா பாராட்டு!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி சீனியர் நடிகர்களில் ஒருவராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பயணத்தை தொடர்ந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, தற்போது சினிமாவிலிருந்து ஓய்வெடுத்து வருகிறார். 89 வயதான இவரின் குடும்பத்தில் இருந்து இப்போது புதிய தலைமுறை அறிமுகமாக இருக்கிறார். அவர் பேரன் மனஸ் மானு விரைவில் கலைத்துறையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கல்வி
நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகை மணிமாலாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் ஒரே மகன் தற்போது அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார். அவரது மகன் மனஸ் மானு அமெரிக்காவில் கல்வி கற்றவராக இருந்தாலும், தமிழை அழகாகவும் தெளிவாகவும் பேசக்கூடியவர்.
பாடகராக அறிமுகம்
சினிமா பின்னணி கொண்ட இவருக்கு கலைத்துறையிலேயே முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இதன் பகுதியாக, மனஸ் மானு தற்போது பாடகராக அறிமுகம் பெற முயற்சி செய்து வருகிறார். இதோடு, அவர் முறைப்படி கராத்தே பயிற்சியும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கான பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மனஸ் சில ஆல்பம் பாடல்களையும் பாடி இருக்கிறார்.
பி. சுசிலா மற்றும் கீர்த்தி சுரேஷின் பாராட்டு
சமீபத்தில் மனஸ் மானு இரண்டு பிரபலங்களைச் சந்தித்து தன் குரல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பாடகி பி. சுசிலாவை நேரில் சந்தித்த மனஸ், அவர்முன் 'சின்னத்தாயவள்' பாடலைப் பாடி கேட்டிருந்தார். மனஸின் குரல் , சாயல் மாற்றங்களும் மிக அழகாக இருந்ததாக சுசிலா பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு சம்பவத்தை மனஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷுடன் புகைப்படம்
அத்துடன், நடிகை கீர்த்தி சுரேஷையும் சந்தித்து தன் பாடலைப் பாடியிருந்தார். மனஸின் குரல் திறமையை கீர்த்தியும் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மனஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவுடன், அது வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
கீர்த்தி சுரேஷுடன் மனஸ் எடுத்துகொண்ட புகைப்படம் இணையத்தில் பரவியதால், அவர் வெறும் பாடகராக மட்டும் அல்லாது விரைவில் நடிகராகவும் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், வெண்ணிற ஆடை மூர்த்தியின் பேரன் மனஸ் மானு, சினிமா பாரம்பரியத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குள் புதிய தலைமுறையின் கலைஞராக வருகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications