Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் பற்றிய ரகசியத்தை பேசிய வெண்ணிற ஆடை மூர்த்தி.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் பற்றி சில ரகசியங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் உடைத்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்தார் என்பது பற்றி வெளிப்படையாக வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பல வருடங்களாக புகை படித்தல் மற்றும் மது பிடிக்கும் பழக்கம் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனாலயே நட்சத்திர ஓட்டலில் ரஜினிகாந்த் மது குடிப்பதற்காகவே தனி அறை வைத்திருந்தாராம். அதிலும் எப்போதும் தனியாகவே மது அருந்தும் ரஜினி எப்போதாவது சில சமயம் கம்பெனிக்கு மற்ற நடிகர்களுடன் சேர்ந்து மது அருந்துவாராம்.

actor venniradai moorthy has revealed some secrets about actor Rajinikanth

ஆனால் பல வருடங்கள் கழித்து அந்த பழக்கத்தை நடிகர் ரஜினி விட்டுவிட்டார்‌ அதைப் பற்றி பல பேட்டிகளில் அவரே சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது தான். சிறுநீரகம் செயலிழந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த பிறகு மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் அவர் விட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று பல இடங்களில் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி குறித்து வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஒரு படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தேன். அந்த படத்துக்கான படபிடிப்பு மைசூரில் நடந்தது. அப்போ ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு நான் ஒன்னும் பண்ண மாட்டேன் ரூமில் தனியாகத்தான் இருப்பேன். சில நேரங்களில் மது அருந்துவேன் என்று சொன்னேன்.

அதற்கு ரஜினிகாந்த் அப்படியா அப்போ ரெடியா இருங்க கார் அனுப்புறேன் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே கார் வந்தது... நானும் காரில் ஏறி அவருடைய அறைக்கு போனேன். பிறகு அவருடைய அறையில் நானும் மது அருந்தி கொண்டே இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையில் வேறு யாருமே இல்லை. அப்போ கூட நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் நடிக்கும் படங்களில் வாய்பு கேட்க மாட்டேன்.

அதுபோல நீங்கள் நடிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதை நீங்க தடுத்து விடாதீங்க என்று சொன்னேன். அதற்கு அவர் சிரித்துவிட்டார். பிறகு என்னிடம் நிறைய விஷயங்கள் பேசினார். அதற்குப் பிறகு என்னை அவர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அங்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து நான் நல்லா சாப்பிட்டதும் என்னை அறையில் கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டார்.

அதற்கு பிறகு ரஜினிகாந்துடன் எனக்கு அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் ரஜினிகாந்த் ரொம்பவும் பண்பான மனிதர் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி கடைசியாக இட்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் எல்லோரோடும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

அதுபோல சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் எந்த சினிமாக்களிலும் நடிக்கவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மனோ என்ற ரவுண்டில் மட்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதுபோல தன்னுடைய மகனோடு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் சில பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+