வீட்டில் விசேஷம்.. மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய சிறகடிக்க ஆசை முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவருக்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். அவருடைய மனைவி நடிகை வைஷ்ணவி வெற்றிவசந்த்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் அறிமுகமாகும் நடிகர்களுக்கும் வெள்ளி திரை நடிகர்களுக்கு இருக்கும் பிரபலம் எளிமையாக கிடைத்து விடுகிறது. ஆரம்பத்தில் எல்லாம் சினிமா கதாநாயகர்கள் மட்டும்தான் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருப்பார்கள். ஆனால் இப்போது சின்னத்திரையிலும் சில சீரியல் நடிகர்கள் ரசிகர்களின் ஃபேவரைட் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் நடிகர் வெற்றி வசந்தும் ஒருவர்.

சிறகடிக்க ஆசை முத்து
வெற்றி வசந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். இதற்கு முன்பு சில ஷார்ட் பிலிம்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த சீரியல் மூலமாக சின்னத்திரை விஜய் சேதுபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலிலேயே இவருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று இவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
எதிர்பார்க்காத அறிவிப்பு
அதுபோல வெற்றி வசந்த்திற்கு கடந்த வருடத்தில்தான் திருமணம் நடைபெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் விஷயம் முதலில் அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியானார்கள்.
காதல் திருமணம்
காரணம் வெற்றி வசந்த் பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு அண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் நிஜத்தில் அவர்கள் திருமணம் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வெற்றி வசந்த்திற்க்கு பிறந்தநாள். அதற்காக அவருடைய மனைவி பல சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
புது காரில் பலூன் எல்லாம் பறக்கவிட்டு படத்தில் காதலனுக்கு காதலி ப்ரொபோஸ் செய்வது போல இவரும் செய்து இருக்கிறார். இதை எதிர்பார்க்காத வெற்றி வசந்த் சந்தோசத்தில் திக்கு முக்காடி போயிருக்கிறார். அதுபோல இவருக்கு விஜய் டிவி தரப்பில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வெற்றி வசந்த மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து இருந்தார்.
வெற்றி வசந்த் பதிவு
அதுபோல சிறகடிக்க ஆசை சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிலும் இவருடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெற்றி வசந்த் இந்த ஸ்பெஷல் நாளில் எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் ரொம்பவும் நன்றி. இந்த நாளில் சூட்டிங் ஸ்பாட்டிலும் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தது. எல்லாருடைய அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications