எதிர்நீச்சல் 2வில் இவங்கலாம் இருக்காங்க! சீரியல் தொடங்கும் முன்பே நடந்த கொண்டாட்டம்!
சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை நடிகர் விபு வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது.
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரைக்கும் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. முதல் சீசனில் நடித்த கனிகா, ஹரிப்ரியா, பிரியதர்ஷினி மூன்று பேரும் இரண்டாவது சீசனிலும் தொடர்வதாக ப்ரோமோவில் காட்டப்பட்டது.

அதுபோல ஜனனியாக நடித்து வந்த மதுமிதா மட்டும் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பார்வதி அறிமுகமாக இருக்கிறார். பார்வதி ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்தவர்தான். இனி இவர்தான் இந்த சீரியலின் ஜனனியாக தொடர்கிறார்.
அதே நேரத்தில் மற்ற நடிகர்கள் யாரெல்லாம் விலகப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இப்படியான நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியல் முதல் பாகத்தில் கதிராக நடித்த நடிகர் விபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் விபுவின் பிறந்தநாளை எதிர்நீச்சல் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எல்லோரும் கொண்டாடி இருக்கிறார்கள். அதில் ஈஸ்வரியின் மகன் தர்ஷன், ஜீவானந்தத்தின் மகள், கரிகாலன், ஆடிட்டர் போன்றோர் இருக்கிறார்கள். ஆனால் ஆதிரை, விசாலாட்சி, பட்டம்மாள் போன்றோர் காணவில்லை.
இதனால் இவர்கள் சூட்டிங் வரவில்லையா? என்ற கேள்விகளும் இருக்கிறது. இந்த சீரியலுக்கான சூட்டிங் தொடங்கிவிட்டது என்று தெரிகிறது. விரைவில் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் முதல் பாகம் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் அதே நேரத்தில் தான் இப்போதும் இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இந்த சீரியலில் வில்லனாக வேலராமமூர்த்தி நடிக்கப் போகிறாரா? அல்லது அவருக்கு பதிலாக புது நடிகர் யாரேனும் வரப்போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு வேலராமமூர்த்தி இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்தார். வேல ராமமூர்த்தி அவருடைய இயல்பான நடிப்பை காட்டி இருந்தாலும் மாரிமுத்து போல இல்லை என்று பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதனால் அவர் இனி தொடர்வாரா? இல்லையா? என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்த சீரியலில் உங்களுக்கு பிடித்த கேரக்டர் யாரு? எந்த கேரக்டர் இரண்டாவது பாகத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீங்க? உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications