அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திட்டாங்க.. நிராகரித்த நடிகை பற்றி விஜய் ஆண்டனி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி தன்னோடு ஒரு படத்தில் நடிகை மேகா நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் என மேகா பக்கத்தில் இருக்கும் போது பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதற்கு மேகா தான் எதற்காக விஜய் ஆண்டனியோடு நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் என்பதை பற்றி விளக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகர் விஜய் ஆண்டனிக்கு அறிமுகமே தேவை இல்லை. பாடகர் ஆகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமாகும் போது இவருடைய பாடல்களில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று பலருக்கு புரியாவிட்டாலும் இசையால் மனதை துள்ளவைத்து விடுவது தான் இவருடைய தனி சிறப்பாக இருந்தது.

Television Vijay Antony Entertainment

அதிலும் "நாக்க முக்க" பாடல் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. யார்ரா இந்த நாக்க முக்க பாட்டுக்கு சொந்தக்காரர் என்று இவரை தேடிப் பார்க்கும் அளவிற்கு இவருக்கு அதிகமான வரவேற்பும் கிடைத்தது. இப்போது இளைஞர்கள் மத்தியில் இவருடைய இசைக்கு பெரும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். டான்ஸ் தெரியாதவர்களையும் கூட தன்னுடைய இசையால் டான்ஸ் ஆட வைத்து விடுவார்.

இவர் நடிக்க தொடங்கிய பிறகு அதிகமாக இசையமைப்பாளர் அமைக்காததால் அவருடைய இசையை தான் ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகிறார்கள். இவர் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் ஹிட் லிஸ்டில் இருக்கின்றன. அதே நேரத்தில் நல்ல கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக அறிமுகம் ஆகி தொடர்ந்து மூன்று படங்கள் ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதிலும் தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கும் இவர் நடிப்பில் விரைவில் மழை பிடிக்காதவன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்பட அணியினரோடு விஜய் ஆண்டனி பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் பற்றி விஜய் ஆண்டனி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Television Vijay Antony Entertainment

அதில் அவர் கூறும் போது ஏற்கனவே இதற்கு முன்பு ஒரு படத்தில் என்னை இவங்க ரிஜெக்ட் பண்ணிட்டாங்க என்று மேகா பற்றி கூறியிருக்கிறார். அதற்கு மேகா ரிஜெக்ட் எல்லாம் பண்ணல.. அந்த நேரத்தில் வேறொரு படம் கையில் இருந்தது. அதனால் தான் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று சொன்னேன் என்று சொல்ல, விஜய் ஆண்டனி இல்லை.. இவங்க தான் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.

அதனால எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா...? என்று கிண்டலாக பேசியிருக்கிறார். மேலும் நாங்க இப்போ நல்ல நண்பர்களாகி விட்டோம். ஆரம்பத்தில் என்னை வேண்டாம் என்று சொன்னதெல்லாம் பழசு.. அப்போ என்ன அசிங்கப்படுத்தி இருக்கலாம்.. என்னென்னமோ செய்திருக்கலாம்.. ஆனால் இப்போ நாங்க அப்படி இல்லை என்று விஜய் ஆண்டனி மேகாவிடம் பேச முதலில் விஜய் ஆண்டனி தான் ரிஜெக்ட் செய்து விட்டேன் என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியான மேகா கடைசியில் சிரித்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+