ஜீ தமிழில் விஜய் ஆண்டனி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி.. ஆரம்பமே சர்ச்சை! ஆனால் அவர் கொடுத்த செம பஞ்ச்
சென்னை: ஜீ தமிழில் நடிகர் விஜய் ஆண்டனி மகா நடிகை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து இணையத்தில் சில சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் அதை சாயலாகவே தொடங்குவது வழக்கம்தான். அதுபோல்தான் தற்போது கூட ஜீ தமிழில் மகா நடிகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இதே போல ஏற்கனவே விஜய் டிவியில் கதாநாயகி நிகழ்ச்சி ஒளிபரப்பானது இதில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் பல பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கதாநாயகி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகைகளுக்கு சின்னத்திரையில் வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அதிலும் கதாநாயகி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகை ஷாலினி தான் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ராஜி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மத்திய நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்போது ஜீ தமிழிலும் மகா நடிகை என்ற பெயரில் புது நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் ஆண்டனி தொகுத்து வழங்குகிறார். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் ஆண்டனியும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதிலும் இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரமோ வெளியானதும் இது கதாநாயகி நிகழ்ச்சியின் காப்பி தான் என்று இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகிறது. அதே நேரத்தில் அந்த புரோமோவில் விஜய் ஆண்டனி பேசியது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
அதாவது விஜய் ஆண்டனி இசை ஒன்றைக் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறார். அப்போது உன் வாழ்க்கை இனி எதை அடைய நினைத்தாலும் உன் மீது நீ அசைக்க முடியாத நம்பிக்கையே வைத்திருக்கும் போது அது நடக்கும் நடந்தே தீரும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. உன் எண்ணம் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரம் பயணிக்கும். எனவே எப்போதும் மனதை உறுதியாக வை என்று மோட்டிவேஷனாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவருடைய நடிப்பு மற்றும் இசையை தாண்டி இவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி முன்னுதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் பல இடங்களில் நடைபெற்று இருந்தது. கடந்த மாதத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற பல இடங்களில் ஆடிஷன் நடைபெற்று இருந்த நிலையில் அதில் செலக்ட் ஆன போட்டியாளர்கள் இனி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications