விஜயிடம் சினிமாவை விட்டு ஏன் போறேன்னு கேட்டேன்.. அதற்கு சொன்ன வார்த்தை..! சஞ்சீவ் எமோஷனல்
சென்னை: நடிகர் விஜய் விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ், தன்னுடைய நண்பன் விஜயிடம் நீ சினிமாவை விட்டு விலகப் போகிறாயா என்று கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் இதுதான் என்று சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் விரைவில் சினிமாவில் இருந்து விலக போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களாக விஜய் பல உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் அரசியலில் இனி கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் விஜயின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ், விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், நாங்கள் காலேஜ் படிக்கும் போதெல்லாம் கட்அடிச்சு கொண்டு படம் பார்க்க போயிருக்கிறோம். அதிலும் எஜமான் படம் பார்க்கப் போனதை எங்களால் மறக்க முடியாது. எல்லோரும் தியேட்டரில் அந்த அளவிற்கு சத்தம் போடுவோம். விஜய் சினிமாவில் பார்ப்பதற்கு டெரர் போல இருப்பார். ஆனால் எங்கள் கூட இருக்கும்போது ரொம்பவும் ஜாலியாக இருப்பார். மத்தவங்க கிட்ட தான் அவர் அமைதியாக இருப்பார். ஆனால் எங்ககிட்ட எல்லாம் ரொம்பவே ஜாலியாக கிண்டல் செய்வார்.
அதுபோல விஜய், நான், எங்களுடைய நண்பர்கள் எல்லோரும் ஒருமுறை பைக்கில் செல்லும்போது போலீஸிடம் மாட்டி இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். அதோடு அவரிடம் விஜய் சினிமாவை விட்டு விலக போவதாக கூறப்படுவது பற்றி கேள்வி கேட்ட நிலையில், அதற்கு சஞ்சீவ் பேசுவதில் எனக்கு அன்பு செய்தி ரொம்பவே வருத்தமா இருக்கிறது. நான் அவன் நண்பர் என்று சொல்வதை விடவும் அவனின் தீவிரமான ரசிகன் நான்.
அதனால் என்னால் அவன் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. ரசிகர்கள் நீங்கள் அதை எப்படி நினைக்கிறீங்க என்று கேட்டிருக்கிறார். அதோடு நான் இது பற்றி விஜய் இடம் கேட்டேன். நீ சினிமாவை விட்டு விலகப் போவதாக சொல்கிறார்களே என்ன என்று கேட்க அதற்கு கேள்விப்பட்டியா? அப்போ அதுதான் உண்மை என்று சொல்லிவிட்டான். ஆனால் மக்கள் இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
மக்களின் கேள்விகளுக்கு விஜய்யின் பதில் விரைவில் வரும் என்று அந்த பேட்டியில் சஞ்சீவ் பேசியிருக்கிறார். நடிகர் சஞ்சீவ் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல விஜயுடனும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் விஜயின் நண்பராகவே பல படங்களில் நடித்திருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜயின் நண்பராக நடித்திருப்பார்.
சின்ன திரையில் சஞ்சீவ்க்கு திருமதி செல்வம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. தற்போது கூட சன் டிவியில் வானத்தைப்போல சீரியலிலும், லட்சுமி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜயை போலவே அதிகமாக மேனரிசம் காட்டுகிறார் என்று அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் அதை சஞ்சீவ் கண்டு கொள்வதில்லை. இப்போது தன்னுடைய நண்பர் குறித்து சஞ்சீவ் நெகிழ்ச்சியோடு பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications