விஜய் மாநாட்டில் பேசிய “அந்த” டயலாக் எஸ்.ஜே சூர்யா பட டயலாக்கா? அதுவும் கிரண் பேசியதா?
சென்னை: நடிகர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தார். அப்போது அவர் பேசிய டயலாக் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த திரைப்படத்தில் கிரண் பேசிய டயலாக் என்று இணையத்தில் சில வீடியோஸ் தீயாக பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநாட்டில் விஜய் பேசிய செயல் திட்டங்கள், கருத்துக்கள் பற்றி அவருடைய ஸ்பீச் தான் இப்போ வரைக்கும் இணையத்தில் ட்ரெண்டிங்க் ஆகிக்கொண்டிருக்கிறது. விஜய் இதுவரைக்கும் இல்லாத வகையில் மேடையில் ஆக்ரோஷமாக பேசியது அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

விஜய் சினிமாவில் கூட இப்படி பேசவில்லை என்று சொல்லும் அளவிற்கு தான் அவருடைய முதல் மாநாட்டில் தன்னுடைய அதிரடியான பேச்சால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அந்த மாநாடு பற்றியே பேச வைத்திருக்கிறார். முதல் மாநாட்டில் தன்னுடைய எதிரி யார்? தன்னுடைய கொள்கை என்ன? என்பது பற்றி அவர் பகீரங்கமாக பேசியது பலராலும் பாராட்டபட்டு வருகிறது. சிலரால் விமர்சிக்கவும் படுகிறது.
சினிமாவின் புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய் இனி தனக்கு சினிமா தேவையில்லை என்று தான் வாங்கிய கோடிக்கணக்கான சம்பளத்தை உதறி தள்ளி விட்டு மக்களுக்காக சேவை செய்வதற்காக அரசியலில் களம் புகுந்து இருக்கிறார். சினிமாவில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது போலவே அரசியலிலும் இவருக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு பல தலைவர்களின் கருத்துக்களையும், பல தலைவர்களின் கொள்கைகளை காப்பி செய்து பேசி இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் படும் மோசமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஏற்கனவே விஜய் அந்த மேடையில் பேசியிருந்தார்.
இதுவரைக்கும் நாம் நம்முடைய எதிரி யார் என்று சொல்லவில்லை ஆனால் இப்போது சொல்லியிருப்பதால் இனி நம்மை நாலா பக்கமும் இருந்து தாக்குவார்கள். அது தெரிந்துதான் நான் இப்போது மேலும் தைரியமாக களத்தில் நிற்கிறேன் என்று பேசி இருந்தார். அவர் சொன்னது போலவே அவர் பேசிய டயலாக் ஒன்றை இப்போது அதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் வந்துவிட்டது என்று இணையத்தில் சிலர் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

அதாவது விஜய் கட்சி மாநாட்டில் நம்மளுடன் சில பேர் வரலாம் இல்லையோ? அதற்காக அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அப்படி வருகிறவர்களையும் அன்போடு அரவணைக்கனும் இல்லையா? என்று விஜய் பேசியது காப்பி என்று நெட்டிசன்கள் பங்கம் செய்கிறார்கள்.
அதாவது விஜய் மாநாட்டில் பேசியது ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் கிரண் நடித்த படத்தில் கிரண் பேசிய வசனத்தை தான் கொஞ்சம் மாடுலேஷன் செய்து மாநாட்டில் விஜய் பேசி விட்டார் என்று கலாய்க்கிறார்கள். அந்த படத்தில் கிரண், அவருக்குத்தான் வயசாயிடுச்சு இல்லையா...? நீங்க சின்ன வயசு இல்லையா...? நீங்க புதுசா குடி வந்து இருக்கீங்க இல்லையா..? என்று அவர் இழுத்து இழுத்து பேசுவது போலவே மாநாட்டில் விஜய் பேசியிருக்கிறார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications