சீரியலையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி..எந்த சீரியலில் தெரியுமா?முக்கியமான நேரத்தில்தான் வருகிறார்
நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஆபத்தான நிலையில் இருக்கும் பொம்மிக்கு ஒரு நடிகராக உதவி செய்வது போன்று நடித்திருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது முதல்முறையாக நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஒரு நடிகராக நடிக்கிறார்.
சீரியலையும் விட்டு வைக்காமல் விஜய் சேதுபதி செய்திருக்கும் செயலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சீரியலின் ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பொம்மிக்கு அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில் சித்தார்த்துக்கு உதவுவதற்காக விஜய் சேதுபதியே போன் செய்திருப்பதாக புதிய பிரமோ வெளியாகி இருக்கிறது.

வாய்ப்பை விடுவதில்லை
நடிகர் விஜய் சேதுபதி கால் வைக்காத இடமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்கள் கொடுக்கும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தனக்கு வரும் திரைப்படங்களில் வில்லனாகவும், நடிகராகவும் குணசித்திர வேடத்திலும் மிரட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி கடந்த வருடம் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தார். அப்போதே இவரை குறித்து அதிகமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. எதையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி தற்போது சின்னத்திரைக்கும் காலடி எடுத்து வைத்து விட்டார் என்று பலர் கூறி வந்த நிலையில் தற்போது சீரியலிலும் விஜய் சேதுபதி வர இருக்கிறார்.

ஆபத்தான நிலையில் பொம்மி
அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் மக்களின் செல்வனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது வெளியானதும் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக தான் இருந்து வருவதாக கருத்து கூறி வருகின்றனர். காரணம் இந்த சீரியலில் பொம்மி யை இப்போதுதான் சித்தார்த் விரும்ப ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் பொம்மி எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்து அவரது தலையில் அடிபட்டுவிட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். பொம்மிக்கு தற்போது பிளட் அதிகமாக தேவைப்படுகிறது அதற்கு சித்தார்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ப்ரோமோ
பொம்மிக்கு பிளட் கொடுப்பதற்காக யாரெல்லாம் உதவி செய்கிறேன் என்கிறார்களோ அவர்களை எல்லாம் வில்லி கடத்தி விடுகிறார். தொடர்ந்து பொம்மிக்கு ப்ளட்டு கிடைக்காமல் சித்தார்த் தவித்து வருகிறார். மருத்துவமனையில் டாக்டர்கள் பொம்மிக்கு அவசரமாக பிளட் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வரும் சித்தார்த்துக்கு உதவுவதற்காக சித்தார்த் ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி போன் செய்கிறார். விஜய் சேதுபதியின் போனை பார்த்ததும் சித்தார்த் என்ன விஜய் சேதுபதி கால் பண்ணி இருக்கிறார் என்று போனை எடுக்கிறார். பின்பு சித்தார்த் உங்களுக்கு பிளட் கிடைத்து விட்டதா என்று கேட்கிறார். இல்லை சார் பிளட் தருகிறேன் என்றவரையும் யாரோ கடத்திட்டாங்க என்று சொல்ல, பொறுமையா இருங்க பதட்டப்படாதீங்க நான் என்னோட ரசிகர்களுக்கு கூறியிருக்கிறேன் அவங்க உங்களை தேடி வந்துகிட்டு இருக்காங்க என்று பேசியிருக்கிறார். இந்த பிரமோ தற்போது வைரலாகி வருகிறது.

போனிலே நடிப்பு
சித்தார்த் பொம்மியை கூட்டிக்கொண்டு சென்று இருக்கும் ஆம்புலன்ஸ் பின்னாடியே விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலர் பைக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விறுவிறுப்பான கட்டத்தில் பொம்மி இனி காப்பாற்றப்படுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போது விஜய் சேதுபதி போன் மூலமாகவே இந்த சீரியலில் நடித்து முடித்து இருப்பது நெட்டிசன்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. தங்களுக்கு கண்டென்ட் கிடைத்துவிட்டது என்று இதை வைத்து மீம்ஸ்களாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். தனக்கு வாய்ப்பு வந்தால் சீரியலையும் விட்டுவிடாமல் விளாசுபவர் தான் மக்கள் செல்வன் என்று விஜய் சேதுபதியை நெட்டிசன்கள் புகழவும் செய்கிறார்கள்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications