விஜய் சேதுபதியா இது? வாய்ப்புக்காக இப்படி ஒரு வேலை செய்தாரா? லீக்கான போட்டோ.. அப்போ எப்படி இருந்திருக்காரு
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் யாருடைய துணையும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரி ஆகி பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய ஆரம்ப பயணம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்த நேரத்தில் அவர் பயன்படுத்திய விசிட்டிங் கார்டு புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வாய்ப்புகள் எல்லோருக்கும் எளிமையாக வந்து விடாது. கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தாலே ஒரு நாள் இல்லை என்றால் இன்னொரு நாள் கண்டிப்பாக நம்முடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு பலர் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

விஜய் சேதுபதி நடிகராக வேண்டும் என்று சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பல அவமானங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து இன்று "மக்கள் செல்வன்" என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். ஒரு வருடத்தில் இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று சொல்ற அளவிற்கு கதாநாயகனாகவும் வில்லனாகவும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் என்ட்ரி கொடுத்து பலரையும் வியக்க வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதியின் பயணம் பல மொழிகளிலும் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஹிந்தி, மலையாளம் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து கொண்டு இருக்கிறார்.
துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்திருந்தார். அதற்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு "தென்மேற்கு பருவக்காற்று" திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. 2012ல் சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையரும் பத்மினியும், காதலும் கடந்து போகும், இறைவி, விக்ரம் வேதா, சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதிலும் ஒரே வருடத்தில் எட்டு படங்கள் வரைக்கும் விஜய் சேதுபதி நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் சரிவை சந்திக்க வில்லன் அவதாரமும் எடுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல நடிகர்களுடன் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில் இப்போது பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கேட்டு அச்சடித்து கொடுத்த விசிட்டிங் கார்டு இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .அந்த கார்டில் ஒல்லியான தேடத்தோடு விஜய் சேதுபதி சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அதோடு அந்த கார்டில் அவருடைய செல்போன் நம்பர் மற்றும் அவருடைய அட்ரஸ் உள்ளிட்டவை இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications