பிறந்தநாள் கொண்டாடப்போன விஜய் சேதுபதி.. சட்டென ரசிகர் கொடுத்த அதிர்ச்சி! உடம்பில் அந்த உருவம்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் அவருக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அங்கு ஒரு ரசிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் போட்டு இருந்த டாட்டூவை தன்னுடைய முதுகில் போட்டு அங்கிருந்த எல்லோரையும் இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
நாளுக்கு நாள் சினிமாவின் மோகம் அதிகரித்து வர சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கு அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய ரசிகர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்கள். அதே நேரத்தில் சில ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக சில செயல்களை செய்வது பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அந்த வகையில் தான் நடிகர் விஜய் சேதுபதிக்காக அவருடைய ரசிகர் ஒருவர் செய்த செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று பெரிய நடிகராக வளர்ந்திருக்கிறார்.
சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியலிலும் சில இடங்களில் வந்து போயிருந்த விஜய் சேதுபதி இப்போது சீரியல், சினிமா என்று கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விஜய் சேதுபதி முன் மாதிரியாக இருக்கிறார்.
விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அவருடைய ரசிகர்கள் விஜய் சேதுபதிக்காக சிறப்பாக ஒரு பங்க்ஷன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் பல ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு ரசிகர் விஜய் சேதுபதி முன்பு அவருடைய சட்டையை கழட்டி விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதாவது விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் போட்டு இருந்த அதே டாட்டூவை தன்னுடைய முதுகில் போட்டு அதை விஜய் சேதுபதி இடம் காட்டி சந்தோஷப்பட்டு இருக்கிறார்.

இதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகமான ரசிகர்கள் விஜய் சேதுபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் விஜய் சேதுபதி இடம் நெருங்கும்போது அவருடைய பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போது விஜய் சேதுபதி பாதுகாவலர்களை தடுத்து நிறுத்தி மாற்றுத்திறனாளி ரசிகர் உடன் போட்டோ எடுத்து அவருக்கு முத்தமும் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications