தியேட்டர்ல வெடிகுண்டு வச்சுட்டாங்க.. பல வருடம் கழித்து உண்மையை உடைத்த நடிகர் விஜயகாந்த் மகன்
சென்னை: நடிகர் விஜயகாந்த் நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் அவருடைய மகன் தன்னுடைய அப்பா விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் நடிகர் விஜயகாந்த் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மகன் சொன்ன பல உண்மைகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதுவும் தன்னுடைய அப்பா திரைப்படம் வெளியாகும் போது நடந்த நிகழ்வு குறித்து சண்முக பாண்டியன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த்தை அந்த காலத்தில் வாழ்ந்த ரசிகர்கள் பலரும் எப்போதும் கொண்டாடி வருகின்றனர். இப்போது உள்ள 2கே கிட்ஸ்கள் பலருக்கும் விஜயகாந்த் நடிப்பு மற்றும் அவருடைய பெருமை தெரியாமல் இருந்தாலும் பல 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு ரோல் மாடல் அவர்தான்.
நடிகர் விஜயகாந்த் ஹேர் ஸ்டைல் முதல் ஆடை அலங்காரங்கள் வரை பலர் அவரை காபி செய்து வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரஜினி கமல் போன்றோர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜயகாந்தின் சண்டைக் காட்சிகளுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நிலையில் அவருடைய போதாத காலம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் நடிப்பில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் கம்பீரமாக விஜயகாந்தை பார்த்த ரசிகர்களால் அவருடைய தற்போதைய தள்ளாடிய நிலைமையை பார்க்க முடியவில்லை என்று பதறி வருகின்றனர். பலர் சீக்கிரமாக விரைவில் நடிகர் விஜயகாந்த் பல பழைய நிலைக்கு வர வேண்டும் என்று வேண்டுதல்களை வைத்து வருகிறார்கள். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சக மனிதர்களை சமமாக பாவிக்கும் உயர்ந்த குணம் விஜயகாந்த்திடம் அதிகமாக இருந்தது என்று சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரோடு நெருங்கி பழகிய பல பிரபலங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய பிறந்தநாளுக்கு பிறகு அவருடைய மகன் மற்றும் மனைவி பல youtube சேனல்களுக்கு பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த நிலையில் பேட்டிகளில் நடிகர் விஜயகாந்த் குறித்து சண்முக பாண்டியனும் பல தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.
அதுபோல விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அவரை குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, பாத்ரூம் கூட்டிட்டு போகிறது போன்ற வேலைகளை அவருடைய மகன்கள் தான் பார்த்து வருகிறார்கள் என்று பிரேமலதா கூறி இருக்கிறார். அந்த வகையில் நாங்கள் நல்ல மகன்களை பெற்றிருக்கிறோம் என்று அவர் பெருமையாக பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் தன்னுடைய அப்பாவை பற்றி சண்முக பாண்டியன் பெருமையாக பேசி இருக்கிறார். அந்த வகையில் ஒரு முறை அப்பா எனக்காக செய்ததை என்னால் மறக்கவே முடியாது. நாங்கள் வெளிநாட்டிற்கு டூர் போயிருந்தோம். அப்போது நான் அம்மாவுடன் இருந்து தொலைந்து விட்டேன். அந்த நேரத்தில் எனக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். தொலைந்த இடத்தில் இருந்து அம்மா இருக்கும் இடத்திற்கு போவது கஷ்டம். அந்த இடத்தில் நான் அங்கே இங்கே நடந்து கொண்டே இருக்கிறேன்.
அதுபோல என்னை காணாமல் என்னுடைய அம்மாவும் இன்னொரு இடத்தில் அழுது கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. என்னுடைய அப்பா கம்பீரமாக அங்கே வந்து என்ன இங்க நின்னுகிட்டு இருக்க வா போகலாம் என்று கையை பிடித்து கூட்டிட்டு போனார். அந்த நினைவுகள் என்னுடைய மனதில் எப்போதும் இருக்கிறது. அது மறக்க முடியாத நினைவு என்று கூறியிருக்கிறார்.
அதுபோல அப்பாவுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் ஒருமுறை அப்பா நடித்த திரைப்படம் ஒன்று எங்கள் ஊர் மதுரையில் தியேட்டரில் வெளியானது. அந்த நேரத்தில் தியேட்டரில் மூன்று நாட்டு வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள். அது வெடித்து ஸ்கிரீன் எல்லாம் கிழிந்து விட்டது. இந்த செய்தி கேட்டு நாங்கள் அங்கு போய் பார்த்தோம். ஸ்கிரீன் கிழிந்து விட்டதால் அன்னைக்கு ஷோவே நடக்காமல் போய்விட்டது. அந்த அளவிற்கு அப்பாவிற்கு அது வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர்.
அந்தப் படம் வேறு ஒன்றும் இல்லை கஜேந்திரா திரைப்படம் தான் என்று சண்முக பாண்டியன் கூறி இருக்கும் நிலையில் அப்பாவுடைய பேவரைட் வசனங்கள், பிடித்த பாடல்கள் என அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications