நடிகர் விஜயகுமாரா இது? மகளோடு குழந்தையாக மாறிய தருணம்.. வெளிநாட்டில் நாட்டாமையின் க்யூட் வீடியோ
சென்னை: நடிகர் விஜயகுமார் தன்னுடைய பேத்தி தியாவின் ரிசப்ஷனுக்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு தன்னுடைய இரண்டாவது மகள் அனிதாவோடு பூங்காவில் குழந்தை போல விளையாடி இருக்கிறார். இந்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர இது அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நடிக்க தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். ஆனாலும் தான் நடிக்கும் அதிகமான திரைப்படங்களில் கெத்தான கேரக்டரில் நடித்து வரும் விஜயகுமாரின் குடும்பத்தில் எல்லோருமே நடிகர்களாக தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும்தான் மருத்துவம் படித்துவிட்டு டாக்டராக மாறி இருக்கிறார். விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவியும் கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகளும் இருந்த நிலையில் விஜயகுமார் முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருந்த நிலையில் விஜயகுமாரின் இரண்டு மனைவியின் குழந்தைகளும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் வனிதாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயகுமார் வீட்டில் விஜயகுமாரின் மகன், மகள்கள் எல்லோருமே நடிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் இரண்டாவது மகள் மட்டும் பல பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க வராமல் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் டாக்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இப்போது வேலையில் இருந்து விலகி இருக்கிறார். அதே நேரத்தில் அனிதா சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதுவும் அதிகமான லைக் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது. அதுபோல அனிதாவின் மகளான தியாவும் மருத்துவம் படித்திருக்கும் நிலையில் அவரோடு படித்த திலன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்தோடு சமீபத்தில் தான் தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் திருமணத்தில் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தியாவின் ரிசப்ஷன் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய மகளான அனிதாவோடு விஜயகுமார் பூங்கா ஒன்றில் விளையாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications